நீதி கானல் நீராகப் போனது!

நஜீப்-

மனித வேட்டைக்காரர்கள் நடாத்திய ஈஸ்டர் தாக்குதல் தெடர்பாக இதுவரை உள்நாட்டு நீதியை எதிர்பார்த்திருந்த பேராயர் மெல்கம் அதில் நம்பிக்கை இழந்து பாப்பாண்டவரிடமாவது மண்டியிட்டு நீதியைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கடைசி முயற்ச்சியில் இறங்கி இருக்கின்றார்.

ஜெனீவா அமர்வுகள் நடக்கின்ற இந்த நேரத்தில் பேராயர் பாப்பிடம் போனது மிகவும் பாரதூரமான ஒரு விடயம். இதனை அரசு எந்தளவுக்குப் புரிந்து வைத்திருக்கின்றதோ தெரியாது. சஜீத் அணிகூட பேராயர் எடுத்த முடிவை அங்கிகரிப்பதாக சொல்லி இருக்கின்றது. இங்கு நீதியைப் பெற முடியா விட்டால் அங்கு போயாவது அதனை அடைய முயல்வது தவறில்லை என்பது அவர்கள் நிலைப்பாடு.

இதற்கு முன்னர்  தற்போதய பிரதமர் எம்.ஆரும்  இப்படி 1988ல் நீதி தேடி போய்த்தானே இருக்கின்றார் என்று வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. பேராயர் ரோம் போய் இறங்க, இது வரை மறைத்து வைக்கப்பட்டிருந்த அறிக்கையின் ஏனைய பாகங்கள் வெளியே வந்திருக்கின்றது. ஈஸ்டர் படுகொலைகள் விவகாரத்தில் உள்நாட்டில் நீதி கானல் நீராகத்தான் நமக்குத் தெரிகின்றது.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.02.2022

Previous Story

முஸ்லிம் புத்திஜீவிகள்-கூட்டமைப்பு பேச்சு!  

Next Story

ஜனாதிபதி-விவசாயி முறுகல்