நஜீப்
நன்றி 02.11.2025 ஞாயிறு தினக்குரல்
வருகின்ற இருபத்தோராம் திகதி நுகேகொடவில் நடக்க இருக்கின்ற அரசுக்கு எதிரான பேரணியில் பிரதான எதிர்க் கட்சி கலந்துகொள்ளாது என்று தெரிகின்றது.
அவர்கள் கிராமமட்டத்தில் தமது ஆதரவாலர்களைச் சந்தித்து கட்சியைப் பலப்படுத்துகின்ற ஒரு முயற்சியில் இருக்கின்றார்கள்.
மேலும் சட்ட ரீதியாக அதிகாரத்துக்கு வந்திருக்கின்ற ஒரு அரசை வன்முறையில் விரட்டுகின்ற முயற்சியில் சஜித் ஈடுபட மாட்டார் என்று அந்தக் கட்சிக்காரர்கள் கூறுகின்றார்கள்.
தனது அணியில் இருப்பவர்கள் இருதோணிகளில் பயணிப்பதை தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சஜித் முகத்திற்கே சொன்னதால் முன்பு பொது எதிரணிக்கூட்டங்களுக்குப் போய் அமர்ந்திருந்த ஹக்கீம் மனோ ரிசாட் போன்றவர்களை இந்த முறை அங்கு கண்டு கொள்ள முடியவில்லை.
ஒட்டுமொத்த இனவாதிகளும் இன்று அங்குதான் இருக்கின்றார்கள். அரசு மக்களை நசுக்குகின்றது என்பதனைவிட தமக்கு ஆபத்து என்பதால் இதிலிருந்து தப்பிக்கதான் இந்தப் பேரணி ஏற்பாடுகள் போலும்.!





