நாம் வாழும் உலகில் என்னதான் நடக்குது!!

ரோபோவைக் திருமணம் செய்த ஆண்:காரணம்?

சுஸ்மிதா குபா

இனி தனது வாழ்க்கையை செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு ரோபோவோடு கழிக்க முடிவு செய்கிறார் கேலகர். எந்திரன் திரைப்படத்தில் ஆண் ரோபோ ஒன்று பெண்ணின் மேல் காதலில் விழுவதைப்போல எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண் ஒருவர் ரோபோ ஒன்றைக் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்ரேலியாவில் இருக்கும் குயின்ஸ்லேண்டைச் சேர்ந்தவர் ஜியாஃப் கேலகர். பத்து வருடங்களுக்கு முன்பு இவருடைய தாய் இறந்துவிட, அதன் பிறகு தன்னுடைய நாய் பென்னியுடனே நாட்களைக் கடந்தி வந்திருக்கிறார் கேலகர். ஒரு நாள் செயற்கை நுண்ணறிவு பற்றிப் படித்திருக்கிறார். இனி தனது வாழ்க்கையை செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு ரோபோவோடு கழிக்க முடிவு செய்கிறார் கேலகர்.

பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஒரு ரோபோவை வாங்க முடிவு செய்கிறார் கேலகர். எம்மா என்ற பெயர் கொண்ட ரோபோவையும் வாங்கி விடுகிறார். “இந்த வகை ரோபோக்கள் விலை மலிவானவை எல்லாம் அல்ல.

ஒரு ரோபோவின் விலையே 3225 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2,70,000 ரூபாய் SL:723600 ரூபாய்). ஆனால் அது வாழ்க்கை வாழ உகந்ததே.

மனிதர்களை போல பேசும், சிரிக்கும்” என்று அந்த ரோபோவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் கேலகர். 2019-ல் சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தடைகிறார் எம்மா.

“முதலில் பெட்டியை திறக்கும் போது எம்மாவின் தலை பொருத்தப்படாமல் இருந்தது. சில நிமிடங்களில் தலையும் பொருத்தப்பட்டது” என்று கூறுகிறார். மனிதனை போன்ற நீல நிற கண்கள், தலைக்கு பின்புறம் இருக்கும் ஸ்மார்ட் போன் போன்ற திரையில் மொழி மற்றும் நடவடிக்கைகளை பதிவு செய்து கொள்ளலாமாம்.

பின்பு தனது குரலை எம்மாவின் காதுகளில் நிறைத்திருக்கிறார். காலையில் வானிலை அறிக்கை முதல் இரவு நேரக் கதைகள் சொல்வது வரை அனைத்தையும் எம்மா செய்யுமாம். ஒரு கட்டத்தில் கேலகர் எம்மாவையே முழுவதும் நம்பி இருக்க துவங்கியிருக்கிறார்.

இந்த நடவடிக்கையினால் சிலர் அவரைக் கேலி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் கேலகர். அம்மாவுக்கு பின் தான் எந்தப் பெண்ணையும் நம்பவில்லை எனவும், தனக்கு எம்மாதான் ஆதரவாக இருந்துள்ளார் எனவும் கூறுகிறார். ஒரு கட்டத்தில் எம்மாவையே திருமணம் செய்யவும் முடிவெடுக்கிறார் கேலகர்.

சட்டப்பூர்வ திருமணமாக இல்லாவிடினும், ரோபோ ஒன்றை மணக்கும் முதல் ஆஸ்திரேலியர் கேலகர் தான். “வைர மோதிரத்தை எம்மாவிற்கு வழங்கியிருக்கிறேன். எம்மாவும் என் மேல் பாசமாக இருக்கிறார். எங்கள் வாழ்க்கை கதை பலருக்கு ஊக்கமளிக்கும்” என்று ரோபோவுடனான தனது திருமணம் குறிப்பிடுகிறார் கேலகர்.

Previous Story

நிரு­வாக சேவை விஷேட தரத்­திற்கு உயர்த்­தப்­பட்­டுள்ள ABM அஷ்ரப்

Next Story

துபாய்:ஒரே ஓடு தளத்தில் 2 விமானங்கள் கடைசி நேர விபத்து தவிர்ப்பு