நஜீப்
நன்றி:16.08.2026 ஞாயிறு தினக்குரல்
சில தினங்களுக்கு முன்னர் கிராமத்து விவசாயிகளுடன் நாமல் ராஜபக்ஸ ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தார். அதில் நாமல் 2029ல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் விவசாயத்தை ஊக்குவிக்க தாங்கள் பதவிக்கு வந்த முதல் ஆண்டில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த கலந்துரையாடலில் விவசாயிகள் தரப்பில் முன்வைக்கப்படுகின்ற கேள்விகள் ஏற்கெனவே நாமலுக்கு முன்வைக்கப்பட்டு அதற்கு அவர் கொடுக்கின்ற பதில்கள் தொடர்பாகவும் அறிவுரைகளும் பயிற்சிகளும் 2029 ஜனாதிபதி நாமலுக்கு வழங்கப்பட்டிருந்ததாம்.!
ஐயா, ஏற்கெனவே சட்டத்தரணி பரீட்சையிலும் இதே பாணியில்தானே நீங்கள் கரை சேர்ந்ததாக நாட்டில் பரவலான விமர்சனங்கள்.!
இது பற்றி கேள்வி எழுப்பியவர்கள் தங்களது காலத்தில் நாட்டிலிருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பி ஓடிய வரலாறுகளும் தான்இந்த விவசாயிகளின் சந்திப்பிலும்நமக்கு நினைவில் வருகின்றன.




