நஜீப்
நன்றி 23.11.2025 ஞாயிறு தினக்குரல்
ஒட்டுமொத்த ராஜாக்களின் கல்வித்தகைமைகள் சான்றிதழ்கள் தொடர்ப்பில் இருக்கின்ற சர்ச்சைகள் பற்றி நாம் முன்பும் ஒருமுறை பேசி இருந்தோம். இப்போது மீண்டும் நாமல் சட்டத்தரணியானது தொடர்பான சர்ச்சை சந்திக்கு வந்திருக்கின்றது.
லண்டன் சிடி பல்கலைக்கழகத்தில் நாமல் சட்டத்தரணி பட்டம் பெற்றதாக சொல்லப்படுகின்றது. அதில் இடப்பட்டிருக்கின்ற கையெப்பம், அவர் பல்கலைக்கழகத்துக்குப் பிரவேசித்த திகதி, அதற்கு இலங்கையில் அங்கிகாரம் கிடைத்த திகதிகள் என்ற அனைத்திலும் பெருத்த குழப்பங்கள் தெரிகின்றது.
ஆனால் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் தாம் இருபத்தியோரம் திகதி நடத்த இருக்கும் பேரணிக்குப் பயந்துதான் அரசதரப்பினர் இப்படியான கதைகளைச் சந்தைப்படுத்தி வருகின்றார்கள். இவை தமக்கு நல்ல விளம்பரமாக அமைந்திருக்கின்றது என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
இது தொடர்பாக ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்ட நிர்மலா கன்னங்கர கடந்த ஏப்ரல் முதல் பலமுறை நாமலைத் தொடர்பு கொள்ள முயன்றாலும் அது சாத்தியப்படவில்லை.





