நாமல் நாடகம்! 

நாட்டில் சமூக வலைத்தளங்களை முடக்கம் செய்திருப்பது பிரயேசானமற்றது எனவும் அதில் தனக்கு உடன்பாடில்லையெனவும் நாமல் ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கருத்து வெளியிட்டுள்ள நிலையில், டிஜிட்டல் அமைச்சரே நீங்கள் தானே என திலித் ஜயவீர நினைவூட்டியுள்ளார்.

இதேவேளை, உங்கள் சித்தப்பாவிடம் இதை நேரடியாகவே பேசலாமே எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பம் ஆட்சிக்கு வந்ததால் பெருமளவு நன்மையடைந்த தெரன தொலைக்காட்சியும் அண்மைக்காலமாக மக்கள் போராட்டங்களை ‘திரையிட்டு’ வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாமல் கூரியது நகைப்பிற்குரியது! ஆளும்கட்சி எம்.பி

அரசு தரப்பில் இருந்து பல தவறுகள் நடந்துள்ளது உண்மைதான். இப்போது அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது என கோப் (CoPE) அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் எம்.பி (Charitha Herath) டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் டுவிட்டரில் தெரிவித்தது,

இந்த நெருக்கடியான நேரத்தில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டது முட்டாள்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

நடக்கும் பல குளறுபடிகளுக்கு அரசு என்ற முறையில் நாமே பொறுப்பேற்கும் போது, ​​அதிகாரிகள் முற்போக்காகச் சிந்திக்க வேண்டும் என்று சொல்வது முழுக்க முழுக்க நகைச்சுவையாகும். என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Story

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு; 90 நாட்களுக்குள் தேர்தல்:

Next Story

TIKTOK OUT