நாமலின் 2 ம் தலை முறை!

நஜீப்-

இன்று ஆளும் தரப்பு ரணில் அணி,   பசில் தரப்பு,    நாமல் நண்பர்கள்,  இதர குழுக்கள் என்று நான்கு அணிகளாகப் பிளவுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த நிலையில் நாமல் இரண்டாம் தலைமுறை என்ற ஒன்றை உருவாக்கி தனது இருப்பை கட்சியில் உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு முயற்ச்சியில் தற்போது இறங்கி இருக்கின்றார்.

அதில் லொஹான் ரத்வத்தே, கனக்க ஹேரத், மற்றும் மூத்த கட்சித் தலைவர்களின் புதல்வர்கள் எனப் பலரை இதில் இணைத்துக் கொண்டு நாமல் நடவடிக்கையில் இறங்கி இருப்பது தெரிகின்றது.

ரணிலுடன் பிரசன்ன ரணதுங்ஹ, காஞ்சன விஜேசேக்கர ரணசிங்க போன்றவர்களும் பசிலுடன் ரோஹித்த அபேகுணவர்தன மஹிந்தானந்த எஸ்.எம். சந்திரசேன ஜென்ஸ்டன் போன்றவர்களும் அணிவகுத்து நிற்க்கின்றார்கள்.

இன்னும் பலர் எந்தத் தோனியை நம்பலாம் என்று தெளிவில்லாமல் இருந்து வருகின்றார்கள். அதிகாரம் கைமாறும் இடத்தில் அவர்கள் பிரசன்னம் இருக்கும்.

நன்றி: 07.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சஜித் பௌசி லடாய்-2

Next Story

வடிவுக்கு நடுங்கும் சஜித்!