நஜீப்
12.10.2025:நன்றி ஞாயிறு தினக்குரல்.
ஜூலம்பிட்டிய அமரே பற்றி முன்பும் தகவல்கள் சொல்லி இருந்தோம். ஜூலம்பிட்டிய என்ற தனது ஊரின் பேரில்தான் அமரே ஜனரஞ்சகமாகி இருந்தார்.
கொலைகளைச் செய்துவிட்டு பாதுகாப்புக்காக மெதமூலனையில் நுழைவது இவரது பாணியாக இருந்திருக்கின்றது.
2012 தெற்கு கடுவானயில் நடந்த ஜேவிபி. கூட்டத்திற்கு இரவு பதினொரு மணிக்கு வந்த ஜூலம்பிட்டிய ‘மெதமூலனை காவல் நாய் தான்’ எனக் கத்திக்கொண்டு இந்தப் படுகொலைகளைச் செய்திருக்கின்றார்.
இருவர் பலி பலருக்கு காயம். அந்தக் கூட்டத்தில் இன்றைய சுகாதார அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸவும் பிரசன்னமாயிருந்திருக்கின்றார். அப்போதுதான் சூடு நடந்தது.
இது ஜேவிபி. கட்சிக்குள் நடந்த மோதல் என்றது பொலிஸ். குற்றம் நிரூபிக்கப்பட்டு அமரவுக்கு மரண தண்டனை கிடைத்தது. அமரே மேன்முறையீடு செய்திருந்தார்.
அப்போது இது பரிசீலனைக்கே தகுதியில்லாதது ஒன்று என சில தினங்களுக்கு முன்னர் நீதி மன்றம் நிராகரித்து விட்டது. மரண தண்டனை உறுதி.