நாட்டை உலுக்கிய கொடூரம்: 5 பேர் கூட்டு வன்புணர்வு! எம்எல்ஏ மகனுக்கு தொடர்பு?

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயது மாணவி ஒருவர் 5 பேரால் கூட்டு வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் எம்எல்ஏ ஒருவரின் மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெலுங்கானா பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கும் ஜூப்ளி ஹில்ஸ் ஏரியாவில் இருக்கும் பப் ஒன்றிற்கு அந்த மாணவி சென்றுள்ளார். பிற்பகலில் அங்கு சக மாணவர்கள் கொடுத்த, மது அல்லாத பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ள அவர் சென்றுள்ளார். கடந்த மே 28ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

அன்று மாலை 5 மணிக்கு திரும்பி வரும் போது, அதே பப்பில் இருந்த 5 பேர் அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக மெர்ஸிடஸ் காரில் அந்த மாணவியை அழைத்து சென்றுள்ளனர்.

கோவையில் பெண் விமானப்படை அதிகாரி வன்புணர்வு.. இரட்டை விரல் சோதனை செய்த அதிகாரிகள்- அதிர்ச்சி பின்னணி

கோவையில் பெண் விமானப்படை அதிகாரி வன்புணர்வு.. இரட்டை விரல் சோதனை செய்த அதிகாரிகள்- அதிர்ச்சி பின்னணி
என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அங்கிருந்து காபி ஷாப் ஒன்றுக்கு அழைத்து சென்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து இன்னோவா காரில் வேறு ஒரு இடத்திற்கு மாணவியை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர். பின்னர் பார்க்கிங் ஒன்றில் நிறுத்திவிட்டு, அந்த பெண்ணை 5 பேரும் மாறி மாறி வன்புணர்வு செய்துள்ளனர்.

4 பேர் காருக்கு வெளியே பாதுகாப்பிற்கு நிற்க ஒவ்வொரு இளைஞராக அந்த மாணவியை வன்புணர்வு செய்துள்ளனர். இதில் இரண்டு பேர் சாததுதீன் மாலிக், ஒமர் கான் ஆகியவர்கள் மேஜர் என்பதால் அவர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுவர்கள்

சிறுவர்கள்

மற்ற 3 சிறுவர்கள் மைனர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களின் பெயர் வெளியிடப்படவில்லை. போலீஸ் அறிக்கையின்படி அந்த மாணவியை வன்புணர்வு செய்துவிட்டு மீண்டும் பப்பில் வந்து அந்த 5 பேரும் இன்னோவா காரில் விட்டு சென்றுள்ளனர். அதன்பின் அந்த மாணவி தனது அப்பாவிற்கு போன் செய்து வீட்டிற்கு சென்றுள்ளார். 31ம் தேதி தன்னை சிலர் தவறாக சீண்டியதாக அந்த மாணவி புகார் அளித்துள்ளார்.

வன்புணர்வு

வன்புணர்வு

பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, போக்ஸோ வழக்கில், பாலியல் தொல்லை என்று புகார் பதிவு செய்யப்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனையில்தான் அந்த மாணவி தன்னை 5 பேர் வன்புணர்வு செய்ததாக கூறி உள்ளார். இதையடுத்து வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஒரு நபர்.. ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த உள்ளூர் நிர்வாகி ஒருவரின் மகன் என்று கூறப்படுகிறது.

4 பேர் கருத்து

4 பேர் கருத்து..ஓவைசி…?

அவர் உட்பட இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு சிறுவன் இந்த வழக்கில் தேடப்பட்டு வருகிறான். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் எம்எல்ஏ ஒருவரின் மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெலுங்கானா பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.

அதன்படி அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த “ஒரு” எம்எல்ஏவின் மகனுக்கு தொடர்பு உள்ளது. அந்த கார் எம்எல்ஏவின் கார்.

எம்எல்ஏ கார்

அந்த காரில் எஎம்எல்ஏ மகன் இருந்துள்ளார். காபி ஷாப்பில் அந்த காரில் இறங்கு எம்எல்ஏ மகன் இறங்கிய வீடியோக்கள் உள்ளன என்று பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதற்கான போட்டோ ஆதாரங்களை அவர் காண்பித்தார்.

அதாவது அந்த மாணவியை ஏற்றி சென்ற மெர்சிடஸ் கார் எம்எல்ஏ மகனின் கார். அதில் ஏற்றி சென்று பின்னர் மாணவியை இன்னோவா காருக்கு மாற்றி உள்ளனர் என்று பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார்.

 புகார் மேல் புகார்

புகார் மேல் புகார்

ஆனால் அந்த எம்எல்ஏ குடும்பத்தினர்.. எங்கள் மகன் இன்னோவா காரில் இல்லை. மெர்சிடஸ் காரில் இருந்து இறங்கி அவன் காபி ஷாப் சென்றுவிட்டான். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

வன்புணர்வு நடந்த இடத்தில் எங்கள் மகன் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். போலீஸ் இன்னும் எம்எல்ஏ மகனை விசாரிக்கவில்லை என்று கூறி பாஜக அங்கு போர்க்கொடி தூக்கி உள்ளது. இந்த விவகாரம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Story

சிறுபான்மைமீதான தாக்குதல்: அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம்

Next Story

போதைப் பொருள் வர்த்தகரிடம் செய்மதி தொலைபேசி!