நாட்டுக்கு வரும் மௌலானா!

நன்றி: 05.07.2026 ஞாயிறு தினக்குரல் 

நஜீப்

அசாட் மௌலானாவிடம் வாக்குமூலமொன்றை பெறுவதற்கு ஷhனி உட்பட அதிகாரிகள் பிரான்ஸ் போக முயன்றபோது அதற்கு அவர்களுக்கு விசா கிடைக்கவில்லை. இதன் பின்னணியில் ஏதும் சதிகள் இருந்ததோ தெரியாது.?

பின்னர் பிரான்ஸ்-லியோ நகரில் நடைபெற்றது இன்டர்போல் கூட்டமொன்றுக்கு இலங்கைக்குஅழைப்புக் கிடைத்தது. அந்த வாய்ப்பை பாவித்துத்தான் அதிகாரிகள் பிரான்ஸ் செல்ல முடிந்தது.

அப்போதுதான் பல சிரமங்களுக்கு மத்தியில் சானி குழு மௌலானவிடம் இந்த வாக்குமூலத்தை பெற்றிருந்தனர்.

அசாட்மௌலானாவுக்கு இங்கு பிடிஆணை இருப்பதாக எதிரணி அரசியல்வாதிகள் பரப்புரை செய்து வந்தனர். இது அண்டப் புளூகு என்பதனை நாம் கடந்தவாரமே சொல்லி இருந்தோம். மௌலானாவுக்கு இன்று அப்படி பிடிஆணை ஏதுமில்லை.

எனவே நமக்குக் கிடைக்கின்ற நம்பகமான தகவல்களின்படி மௌலான ஈஸ்டர் விவகாரத்தில் சாட்சி வழங்க தேவையான சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு வரத்தயாராகவே இருக்கின்றாராம். இதனால் கோடாவுக்கும் கலக்கமாம்.

Previous Story

ஈரான்: ரத்தத்திற்கு ரத்தம்!

Next Story

நடக்கப் போவது என்ன? Canada vs Morocco | World Cup RO16 |