நாட்டிலிருந்து தப்ப ஓடித்திரியும் கோட்டா!

கோரிக்கை மறுக்கப்பட்டது

வார இறுதியில் கலிபோர்னியாவுக்கு செல்வதற்கு கோட்டாபய ராஜபக்ச விசா கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதி ஒருவர் SBS ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பான புகலிடமாக கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவை நாடியதாகவும், எனினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் இன்று (12) நள்ளிரவு 12.00 மணி முதல் பிரமுகர் அனுமதி நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

மத்தள விமானநிலையத்தின்  தீர்மானம்

இலங்கையை விட்டு தப்பிக்க முயற்சிக்கும் பசில்! மத்தள விமான நிலையத்தின் கதவுகளும் மூடப்பட்டன | Mattala Airport Are Also Closed For Basil

இதேவேளை, மத்தள சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும் தமது பணிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

இதன்படி மத்தள சர்வதேச விமான நிலையத்தின் விஐபி டெர்மினலில் விஐபி அனுமதி வழங்கப்படமாட்டாது என குடிவரவு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Previous Story

'நீதி'

Next Story

மீண்டும்  13ஆம் திகதி சுனாமி  மகாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை