-நஜீப்-
நன்றி ஞாயிறு தினக்குரல் 03.08.2025
அரசியல் அரங்கில் அவ்வப்போது அதிரடியான செய்திகள் வருவது இயல்பானதொன்றுதான். ஆனால் சில சமையங்களில் கற்பனை செய்திகளைக் கட்டவிழ்த்து விட்டு அதற்கு உயிர் கொடுக்கின்ற ஏற்பாடுகளும் நடப்பதுண்டு.
அது போலதான் ஆளும் என்பிபிக்குள் முரண்பாடு. ஹரினி பிரதமர் பதவியில் இருந்து தூக்கப்படுகின்றார். டில்வின் நாடாளுமன்றம் வந்து பிரதமராகின்றார் என்ற செய்திகள் வந்தபோது அப்படி ஏதும் நடக்காது.
இது கற்பனைச் செய்திகள் என்று நாம் அடித்துச் சொல்லி இருந்தோம். இப்போது அதுபற்றி எவரும் பேசுவதில்லை. அது அப்படி இருக்க இப்போது வந்திருக்கின்ற ஒரு செய்தி, ரணில் நாடாளுமன்றம் வந்து எதிர்க் கட்சி தலைவராக இருக்கின்றார் என்பது.
அரசியலில் இருந்து சஜித்தை ஓரம்கட்டும் முயற்சிதான் இது. குறிப்பிட்ட ஒரு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் இராஜினாம மூலம் ரணிலுக்கு வாய்ப்பு வழங்கும் ஏற்பாடுதான் இது.! இதில் உண்மை இருக்கின்றது.





