–நஜீப்–
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் குதறும் கதை என்று ஒன்று வழக்கில் இருக்கின்றது. அது போலத்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் கதையும் இருக்கின்றது. தமக்கு தேர்தலில் வாய்ப்பே கிடையாது என்று நன்கு அறிந்த அவர்கள், இப்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஆப்பு வைத்திருக்கின்றார்கள்.
தேர்தல் கோரி நீதி மன்றத்தில் இருக்கின்ற வழக்குகளை சட்ட மா அதிபரை வைத்து நிராகரிக்குமாறு அவர்கள் கேட்டிருக்கின்றார்கள். அந்தக் கதை அப்படி இருக்க, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, நாட்டை ஜனாதிபதி சீரான பாதையில் எடுத்துச் செல்கின்றார்.

எனவே நாடாளுமன்றத்தைக் இழுத்து மூடிவிட்டு நாட்டை ஜனாதிபதி ஆட்சியின் கீழ் சில வருடங்கள் கொண்டுவர வேண்டும் என்று அவர் பகிரங்கமாக் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இந்தக் கொடூரமான வார்த்தைகளை பாவிக்கவும் அதற்கு செயல் வடிவம் கொடுக்கவும் இவர்கள் முயல்வார்கள் என்பது தெளிவு.






