நாடாளுமன்றத்தில் 200 பேர் அவுட்

இன்று நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற 225 பேரில் அடுத்த பொதுத் தேர்தலில்  மீண்டும் அதில் 25 பேராவது திரும்பி அங்கு வர மாட்டார்கள் என்பதனை நான் உறுதிபடக் கூறுகின்றேன். இப்படி பேசி இருக்கின்றார் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ. இவர் தற்போது ஒரு ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டிக்கும் வருகின்றார் என்பதும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

சொல்கின்ற விஜேதாசா ராஜபக்ஸாவுக்கு கூட என்ன நடக்கும் என்று நாம் அவரிடம் கேட்கின்றோம். சுதந்திரக் கட்சி ஊடக அவர் தேர்தலுக்கு வர எதிர்பார்த்தார். மைத்திரியும் அவருக்கு ஆதரவாக நடவடிக்கைகளை எடுத்தார்.

சுதந்திரக் கட்சி இன்று பல கூறுகளாகப் பிரிந்து நிற்பதால் அவர்களுக்கு இருக்கின்ற சில்லறை வாக்குகள் கூட அந்தக் குழுக்களுக்கு பிரிந்து சென்றுவிடும். நாமக்குத் தெரிகின்ற அரசியல்படி விஜேதாச தனக்கு நாட்டில் இருக்கின்ற செல்வாக்கை அளவீடு செய்து பார்க்கத்தான் தேர்தலுக்கு வந்திருக்கின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

Previous Story

57 இலட்ச வித்தியாச வெற்றியாம்!

Next Story

1700.தருவதாக செல்லவில்லையே-ரணில்