நவீன துரோகங்கள்!

-நஜீப்-

தேர்தல் கூட்டணிகள் சமைகின்ற போது கட்சித் தலைவர்கள் தாய்க் கட்சிகளிடத்தில் காசு வாங்கிக் கொள்வதும், அதிகாரத்துக்கு வந்ததும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதும், இராஜதந்திரம் என்று சொல்லி  வாக்காளர்களுக்குத் துரோகம் பண்ணுவதும் பல்டியடிப்பதும் பழையகதை.

ஆனால் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் கட்சித் தலைவர்கள் புதிய வியூகங்களுடன் வருகின்றோம் என்று சொல்லிக் கொண்டு தமது வேட்பாளர்களை டம்மிக் கட்சிகள் ஊடாக இறக்கி தாமே தமது  விண்ணப்பங்களைத் தவறாக நிரப்பியும் அதனை அவர்களே செயலிழக்கச் செய்திருப்பதாக பல இடங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

ஏன் இப்படி நடந்திருக்கின்றது என்று தேடிப் பார்த்தால் பொதுத் தேர்தல் வருகின்ற போது தான் போட்டியிடுகின்ற முதன்மை அணியையும் அந்தக் கட்சி அமைப்பாளர்களையும் பகைத்துக் கொள்ளாமல் வைப்பதற்கான முன்னேற்பாடுதான் இந்த புதிய வியூகம் என்று தெரிகின்றது.

இதனால்தான் பல இடங்களில் மரம் தராசியில் தொங்கி கவிழ்ந்து விட்டது. இது முகவரி மூடி மறைக்கப்பட்ட  ஓர் நாடகம். கதையை விரிவாக சொல்ல வேண்டி இருப்பதால் அது பற்றிய விபரங்களைப் பின்னர் தருகின்றோம்.

நன்றி: 29.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

SLMCக்கு 3 பிரதித் தலைவர்கள்!

Next Story

இலட்சம் வேட்பாளர் படை!