நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார்
 Johnson wins confidence vote by 211 to 148

பிரிட்டன் பிரதமராக 2019 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். 2020ல் கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு சட்டத்தை மீறி மே மாதம், லண்டனின் பிரதமரின் அலுவலக இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் மது விருந்து நடத்தினர். இதற்கு கண்டனம் எழுந்ததால், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினா
இந்நிலையில் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் 2021 ஏப்ரலில் காலமானார். அவரது இறுதி சடங்கின் போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியானது. மீண்டும் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்ச்சையில் சிக்கினார்.

இந்த இரு விவகாரங்களை முன் வைத்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்த கட்சியினரே பதவி விலகும்படி வலியுறுத்தி வருவதால் பிரதமர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது. போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பெரும்பான்மை கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர்.

211 எம்.பி.,க்கள் ஆதரவு
இதையடுத்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக இன்று (ஜூன்.07) பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கன்சர்வேட்டிங் கட்சியின் மொத்தமுள்ள 359 உறுப்பினர்களில் (எம்.பி.,க்கள்) போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக 211 உறுப்பினர்களும், எதிராக 148 உறுப்பினர்களும் வாக்களி்த்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கன்சர்வே்டிவ் கட்சி குழு மூத்த தலைவர் கிராஹம் பிரடே அறிவித்தார். இதையடுத்து போரிஸ் ஜான்சன் அரசு தப்பியது.
Previous Story

நந்தலால் வீரசிங்கவை நீக்கும் செயற்பாட்டை நிறுத்துங்கள்!

Next Story

இந்நிலைக்கு மக்களின் சாபமே காரணம்- இம்ரான் MP