நந்தலால் வீரசிங்கவை நீக்கும் செயற்பாட்டை நிறுத்துங்கள்!

“சங்கம் கவலை”

நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் குறித்து மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

முழு தேசத்தையும் பேரழிவிற்கு உட்படுத்தும் மோசமான முயற்சிகள் இருந்தால் அதனை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் தலையீடு தேவை

நாணயச் சட்டத்தின் விதியின்படி, முந்தைய ஆளுனர் பதவி விலகியதன் பின்னர், இந்த பதவிக்காலத்தின் மீதிக் காலத்திற்கு 2022 ஏப்ரல் 07 ஆம் திகதி நந்தலால் வீரசிங்க ஆளுனராக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் எதிர்வரும் ஆறு வருட காலத்திற்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு வீரசிங்கவை மீண்டும் நியமிக்குமாறு அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்து அவரை நீக்க எவரேனும் சிந்திப்பாராயின், அது முழுக்க முழுக்க உள்நோக்கத்துடன் கூடிய தேசப்பற்றற்ற நடவடிக்கையாகவே இருக்கும் என்றும் மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Previous Story

தென்னாப்ரிக்கா முன்னாள் அதிபரின் பதவி நீக்கத்துக்கு காரணமான குப்தா சகோதரர்கள் கைது!

Next Story

நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி