நஜீப்
நன்றி: 22.03.2026 ஞாயிறு தினக்குரல்
போராட்டத்தில் தற்கொலை தாக்குதலுக்கு பெயர் போனவர்கள் விடுதலைப் புலிகள். இஸ்லாமிய நாடுகளிலும் இது பரவலாக நடந்து வருகின்றது. தேசத்துக்காக மதத்துக்காக மண்ணுக்காக கொள்கைக்காக உயிர் விடுவதுதான் தற்கொலைத் தாக்குதலின் உச்சம்.
சிலரை அதிகார கதிரையில் இருத்துவதற்காக நமது நாட்டில் ஈஸ்டர் தாக்குதல் நடந்தது என்றும் குற்றச்சாட்டு.
அது அப்படி இருக்க இந்த தற்கொலைதாரிகளில் இன்னும் 300 நாட்டில் சுதந்திரமாக நடமாடி வருகின்றார்கள் என்று புத்தகம் எழுதி வருகின்ற 31ம் திகதி அதனை வெள்ளோட்டம் விடுகின்றார் உதய கம்மன்பில.
தான் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடாத்திய ஆய்வில் குற்றவாளிகளை கண்டுபிடித்ததாக உதய விடும் கதை இருக்கின்றது.
குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் துவான் சுரேஸ் சாலே புனிதமானவர் என்பதனை சந்தைப்படுத்த அவர் எடுத்திருக்கும் கடும் முயற்சிதான் இது என்றும் பரவலான குற்றச்சாட்டுகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. அனைவரும் எச்சரிக்கையாக இருப்போம்.



