ரஷ்யாவை நோக்கி வரும் US அணு நீர்மூழ்கி!
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் ஒரு கோமளி!
ரஷ்யா கடல் பகுதிக்கு இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை அனுப்ப உத்தரவிட்டிருப்பதாக டிரம்ப் கூறியிருக்கிறார். இது குறித்து பேசியிருக்கும் ரஷ்ய எம்பிக்கள், இதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, எங்களிடம் அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.
இது மூன்றாம் உலகப் போர் குறித்த அச்சத்தை எழுப்பியிருக்கிறது. ஏழரையை கூட்டுவது டிரம்புக்கு கை வந்த கலை. அப்படித்தான் நேற்று அவருக்கு கை பரபரவென இருந்திருக்கும் போல. சட்டென தன் செல்போனை எடுத்த அவர், “ரஷ்ய முன்னாள் அதிபரும், பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் என்னை டென்ஷன் செய்துவிட்டார்.
எனவே ரஷ்ய பகுதிக்கு அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப உத்தரவிட்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இதுதான் தற்போது சர்வதேச அளவில் ஹாட் டாப்பிக். இது தொடர்பாக செய்திகளை கண்டுக்கொள்ளாத ரஷ்யா, அமெரிக்காவின் கப்பல்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று கூறியிருக்கிறது.
மட்டுமல்லாது டிரம்ப்பின் இந்த உத்தரவு இரு நாடுகளுக்கு இடையேயான மோதலை தூண்டும் என்றும், எனவே அமைதியை கடைபிடிக்க தாங்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறது.
ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் வோடொலாட்ஸ்கி இது குறித்து கூறுகையில், “உலகப் பெருங்கடல்களில் ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை அமெரிக்கக் கப்பல்களை விட கணிசமாக அதிகம். டிரம்ப் குறிப்பிட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் நீண்ட காலமாகவே எங்கள் கவனிப்பில் உள்ளன.
அந்த இரண்டு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களும் பயணம் செய்யட்டும், அவை நீண்டகாலமாகவே எங்கள் இலக்கில் உள்ளன” என்று கூறியுள்ளார். மேலும், உலகம் அமைதியடையவும், மூன்றாம் உலகப் போர் பற்றிய பேச்சுக்கள் முடிவுக்கு வரவும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே ஒரு அடிப்படை ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனை வைத்து அமெரிக்கா தற்போது ரஷ்யாவுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. ஆனால் போரில் ரஷ்யாதான் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவே நேரடியாக ரஷ்யாவுடன் மோத தயாராகிவிட்டதா? என்கிற கேள்வி டிரம்பின் உத்தரவு மீது எழுந்திருக்கிறது.
அப்படி மோதல்கள் நடந்தால் அதன் விளைவு மிக பயங்கரமாக இருக்கும். இதனை தொடக்கி வைத்தது என்கிற வரலாற்று பழி அமெரிக்கா மேல்தான் விழும். ரஷ்யாவை பொறுத்தவரை அந்நாட்டிம் நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கை அமெரிக்காவை விட குறைவுதான். ஆனால், அணு சக்தியால் இயக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் அமெரிக்காவை விட அதிகமாக ரஷ்யா வைத்திருக்கிறது.
இந்த வகை நீர்மூழ்கி கப்பல்களில் எரிபொருள் 20-30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிரப்பினால் போதுமானது. எனவே கடலின் மேற்பரப்பில் வர வேண்டிய அவசியம் கிடையாது. இருப்பினும் கப்பலில் உள்ள பணியாளர்களால் நீண்ட காலத்திற்கு கப்பலில் அடைப்பட்டு இருக்க முடியாது.
எனவே 2-3 மாதங்களுக்கு ஒருமுறை கப்பல் மேலே வரும். சில சமயங்களில் முக்கியமான ஆபரேஷன்கள் எனில் ஓர் ஆண்டு வரை கூட கப்பல் மேலே வராமல் உள்ளேயே இருக்கும்.
அப்படியான கப்பல்களை ரஷ்யா அதிக அளவில் கொண்டிருக்கிறது. எனவே, நீர்மூழ்கி கப்பல் விஷயத்தில் ரஷ்யாவிடம் அமெரிக்கா நேரடியாக மோத முடியுமா? என்பது சந்தேகம்தான்.
அமெரிக்காவின் இப்படியான யோசனையை கேட்டால் புதின் வாய்விட்டு சிரித்துவிடுவார் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். புட்டினுடன் கடலில் ட்ரம்ப் மோதுவது என்பது ஒரு போதும் சாத்தியமில்லை. அந்தளவுக்கு ரஸ்யா ஆதிக்கம் அங்கு இருக்கினறது.
எனவே இதனை புட்டின் ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொண்டது ஒன்றும் ஆச்சர்யமானதல்ல. ரஸ்யா-சீன விடயங்களில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் ஒரு கோமளிதான் என்பது நமது கருத்து.