நகைச்சுவையான வேட்பு மனு!

-நஜீப்-

வேட்பு மனுக்களுக்கு தமது எதிர்ப்புக்களை காட்டுவதற்காக ஒன்றரை மணி நேரம் வரை இறுதி நாளில் வழங்கப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் எதிரணியின் வேட்புமனுக்களை மாற்றுக் கட்சியினர் பரிசீலித்து தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவது நடக்கும்.

கண்ணில் படாத தவறுகள் இருந்தும் சில சந்தர்ப்பங்களில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருவது ஆபூர்வமாக நடந்தும் இருக்கின்றன.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் தேர்தலின் பின்னர் கூட விதி மீறிய விண்ணப்பங்களுக்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடுகளைக் கொடுக்க சட்டத்தில் இடமிருக்கின்றது.

கண்டி-பாததும்பரை பிரதேச சபைக்கு போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளர் இரு அணிகளில் தனது பெயரைப் பதிந்திருக்கும் செய்தி அங்கு தற்போது வைரலாகி வருகின்றது.

நாம் அறிந்த வகையில் நாட்டில் கூட இது ஒரு நகைச்சுவையான நிகழ்வு. ஆதாரபூர்வமாக இது பற்றிய தகவல்களுடன் அதிகாரிகளை கோட்ட போது. இது முற்றிலும் சட்டவிரோத செயல் என்று எடுத்த எடுப்பிலே பதில் சொல்லி இருக்கின்றார்கள்.

அப்படியாக இருந்தால் தேர்தலுக்குப் பின்னர் இந்த இரட்டை வேட்பாளர் மனுக்களுக்கு லடாய் என்பது இப்போதே உறுதி.

நன்றி: 29.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மருந்து சம்பளம் ஓய்வூதியம்!

Next Story

SLMCக்கு 3 பிரதித் தலைவர்கள்!