அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி
தொலைபேசி சின்னம் காலமாகிவிட்டது. அதற்காக தாங்கள் வாக்குகளைக் கோர மாட்டோம், என்று ஹக்கீம் தனது உரையின் போது கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடனான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறவு குறித்தும் ஹக்கீம் இதன்போது அவர் எதிர்க்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த முறை, உள்ளூராட்சித் தேர்தல்களில் நாங்கள் தனித்தனியாகப் போட்டியிடுகிறோம். கண்டியில் கூட, நாங்கள் 11 சபைகளில் தனித்தனியாகப் போட்டியிடுகிறோம்.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் 3 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறார்கள், அதுவும், அவர்களின் சொந்த விருப்பப்படி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்று ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய குறிப்பு:தற்போது இந்த விடயம் ஐமச.வட்டாங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால் சஜித்தை தொடர்பு கொண்டு தேர்தல் மேடைகளில் பேசும் வார்த்தைளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் நமக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது.
இதுதான் ஹக்கீம் அரசியல். இதனை நாம் முன்பு அடிக்கடி சுட்டிக் காட்டி இருந்தது வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்