தொலைந்து போன கப்பல்!

-நஜீப்-

இரு வாரங்களுக்கு முன்னர் (19.06.2022) ‘கடைசிக் கப்பலும் வந்தாச்சு’ என்று குறிப்புச் சொல்லி இருந்தோம். இந்த முறை, காணாமல் போன கப்பல் பற்றிச் சொல்லப் போகின்றோம் ஆனால் இது நம்முடைய கதை அல்ல. ஜேவிபி. அணுரகுமார பகிரங்க அரங்கில் சொன்ன கதை.

நாட்டுக்கு எரிபொருள் கொள்வனவு செய்கின்ற முறையில் ஒரு ஒழுங்கு இருக்கின்றது. இந்த முறை ஊர்பெயர் தெரியா ஒருவருக்கு எரிபொருளை எடுத்து வர அரசாங்கம் பிச்சை எடுத்து வந்த டெலர்களை அள்ளிக் கொடுத்திருக்கின்றது.

அந்தக் கப்பல் இன்று வருகின்றது நாளை வருகின்றது என கிரிக்கட் கமெரி போல் அமைச்சர் காஞ்சன கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அமைச்சர் மௌம். பின்னர் மனிப்பு அலரல். காரணம் வருவதாகச் சொன்ன கப்பலைக் காணவில்லை. சோமாலியக்கரர்களிடம்  கப்பல் சிக்கிவிட்டதா?

இல்லை ஒரு சீனத்துக்காரன் எரிபொருள் காசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டாராம். இந்தக் கதையில் நமக்கு இப்படி ஒரு சந்தேகம்! நம்மவர்களே திட்டம் போட்டு டொலர்களை விளையாடிவிட்டார்களோ என்பதுதான்! வாசகர்களே என்ன நினைக்கின்றீர்கள்?

  நன்றி:03.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மொட்டுக்குள் பெரு வெடிப்பு!

Next Story

'வாய்ப்பு'