-நஜீப்-
நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல்
நடைபெற்று முடிந்த பத்தாவது நாடாளுமன்றத்தில் தமது அரசியல் தலைமைத்துவங்களுக்கு முஸ்லிம் சமூக வாக்காளர்கள் தக்க பதில் கொடுத்திருக்கின்றார்கள்.
சமூகததுக்குப் பெரும் சாபக்கேடாக அமைந்திருந்த 20க்கு வாக்களித்த அனைத்து முஸ்லிம் நடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இன்னும் ஓரிருவர் தேர்தலுக்கு முன்னரே ஏதோவகையில் வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் நமது தலைமைகள் சொல்லித்தான் அப்படி நாம் நடந்து கொண்டோம் என்று அவர்கள் கூறி இருந்த கதைகளையும் நாம் இதற்கு முன்னரும் பல முறையும் சுட்டிக் காட்டி இருந்தோம்.
அது ஏன் என்பது மக்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கின்றோம். வெற்றி பெற்றவர்களும் தொங்கிக் கொண்டுதான் வந்திருக்கின்றார்கள். முன்பு இலட்சக் கணக்கில் வெற்றி பெற்ற தலைவர்கள் இந்த முறை அதில் நான்கில் ஒரு பங்கு வரை வாக்குகளைப் பெற்று நூலிழையில் தொங்கிக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.
அந்த வெற்றி வாய்ப்பும் எப்படி வந்தது என்று விரிவாக பிரிதொரு சந்தர்ப்பத்தில் சொல்ல இருக்கின்றோம்.