-நஜீப்-
நாடு பொருளாதார நெருக்கடிக்கு இலக்காகி இருக்கின்ற இந்த நேரத்தில் நாட்டில் எந்தத் தேர்தல்களும் கிடையாது. பொருளாதார நிலமை சீரான பின்னர்தான் இனி நாட்டில் எந்தத் தேர்தலாக இருந்தாலும் நடாத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் ஆணித்தரமாகக் கூறி விட்டார்.
அப்போ தேர்தல் வரைபடம் தீயில் சாம்பல்! இது அவருடைய வார்த்தைகள் என்று நாம் நம்பவில்லை. ராஜபக்ஸாக்களுடைய தீர்மானத்தைதான் ரணில் நாட்டுக்குச் சொல்லி இருக்கின்றார்.
நாட்டில் ஒரு நல்ல நிருவாகி அதிகாரத்துக்கு வந்து ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் நிலமை சீராக முடியும் என்பது நமது கணிப்பு.
ரணில் கதைப்படி இன்னும் ஒரு இருத்தி ஐந்து வருடங்களுக்குத் தேர்தல் கிடையாது. அப்போது மனிதனுக்கு வயது 98. மஹிந்தாவுக்கு 102. ஒட்டு மொத்த சிங்கள மக்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர் என்ற அளவுக்கு வோட்டு வாங்கிய கோட்டாவே ஓடிப்போக வேண்டி வந்தது.
தேர்தலில் மக்களால் விரட்டியக்கப்பட்ட ரணில் தேர்தலே கிடையாது என்று சொன்னால் அதனை எவ்வளவு தூரம் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்?
நன்றி:27.11.2022 ஞாயிறு தினக்குரல்