தேர்தல் தாமதமாகாது-ஆணையாளர்!

-நஜீப்-

எல்லை நிர்ணயத்தை ஆயுதமாக வைத்துக் தேர்தலைத் தாமதப்படுத்த யாருக்கும் ஆணைக்குழு ஆதரவளிக்காது என்று அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அண்மையில் கம்பஹவில் நடந்த வைபவமொன்றில் பேசும் போது அவர் இந்தக் கதையைச் சொல்லி இருந்தார்.

ஆனாலும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களை அமைத்து அல்லது சர்வஜனவாக் கெடுப்பு என்று குறுக்கு வழிகள் ஊடாக தேர்தலை பின்போட வழிகளும் இருக்கின்றன. இதனை ஆளும் தரப்பு செய்தால் தனக்கு என்னதான் பண்ணச் சொல்கின்றீர்கள் என்றும் இதே ஆணையாளர் கதை விடவும் இடம் இருப்பதையும் நாம் எச்சரிக்கையாக பதிந்து வைக்க விரும்புகின்றோம்.

சமூக ஊடகங்களின் கருத்துக் கணிப்புப்படி மொட்டுக் கட்சி மூன்றாம் இடத்தில் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் மொட்டுக் கட்சியின் ஏழு தலைக்காரர் தேர்தலில் எப்படி ஜெயிப்பது என்பது தனக்குத் தெரியும் என்றும் சொல்லி வருகின்றார். நிதி அமைச்சராக பதவிக்கு வந்து வித்தை காட்டப் போய் கடைசியல் காணாமல் போனவரும் இதே ஆள்தான் என்பதனை என்ன குடிகள் மறந்தா இருப்பார்கள்.?

நன்றி: 18.12.2023 ஞாயிறு தினக்குரல்.

Previous Story

FIFA  2022 யாருக்கு எவ்வளவு பரிசு!

Next Story

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் இரகசிய திட்டம்