தேர்தல் ஆணையத்திற்கு பறந்த சம்பந்தனை மையப்படுத்திய கடிதத்தால் பெரும் சர்ச்சை!

தேர்தல்கள் ஆணைக்குழு

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் தேசியத் தலைவர் என பதவி நிலை ஏதும் காணப்பட்டிருக்கவில்லை என்பதையும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துவதோடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் இல்லாத ஒரு பதவி நிலையை ஏன் தமிழரசுக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்திற்கு பறந்த சம்பந்தனை மையப்படுத்திய கடிதத்தால் பெரும் சர்ச்சை | Observation Center That Exposed Activities Of Itak

இதன் உள்நோக்கம் என்ன என்பது தொடர்பில் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துவதோடு இந்த மோசமான இழிசெயலிற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.

இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருடந்தோறும் தங்கள் கட்சியின் உத்தியோகத்தர்கள் சபை எனப்படும் செயற்குழுவின் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டம், விசாரணை மற்றும் திட்டமிடல் பிரிவு ஆவணமாக வெளியிடும்.

அவ்வாறு இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் காணப்படும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தனது உத்தியோகத்தர் சபை உறுப்பினர்கள் விபரங்களை ஆண்டுதோறும் அனுப்பி வருகின்றது.

இடைக்காலத் தடை

அவ்வாறு அனுப்பப்பட்டு இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்கள் சபை உறுப்பினர் விபரத்திலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சி இரா. சம்பந்தனை தேசியத் தலைவர் என பதவி நிலைப்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மாவை சேனாதிராஜா தலைவராக பதவி வகித்த காலத்திலேயே தமிழினத்தை ஏமாற்றி தமிழரசுக்கட்சி இரா சம்பந்தனை தேசியத்தலைவர் என பதவி நிலைப்படுத்தியிருக்கிறது.

தேர்தல் ஆணையத்திற்கு பறந்த சம்பந்தனை மையப்படுத்திய கடிதத்தால் பெரும் சர்ச்சை | Observation Center That Exposed Activities Of Itak

தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெற்று நிர்வாக உறுப்பினர்களை தெரிவுசெய்வதில் ஏற்பட்ட மோசடிகள் காரணமாக திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் கட்சி உறுப்பினர்களாலேயே வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையிலேயே தமிழரசுக் கட்சியின் இத்தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

அதைவிடுத்து முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தமிழர்கள் பெரிதும் நம்பிய தமிழரசுக்கட்சியை சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சின்னாபின்னமாக்கி இன்று நீதிமன்றில் கொண்டு போய் நிறுத்தியுள்ள இரா. சம்மந்தன் தேசியத் தலைவர் என சொன்னால் தமிழரசுக் கட்சியினரே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

தமிழ் அரசியல் தலைவர்

முதுபெரும் தமிழ் அரசியல் தலைவரான செல்வநாயகத்தையே தேசியத் தலைவர் என தமிழினம் அழைத்து பெருமை கொள்ளாது அவரை தந்தை செல்வா எனவே இன்று வரை கொண்டாடி வருகிறது.

தேர்தல் ஆணையத்திற்கு பறந்த சம்பந்தனை மையப்படுத்திய கடிதத்தால் பெரும் சர்ச்சை | Observation Center That Exposed Activities Of Itak

தமிழினத்திற்கு தேசியத் தலைவராக நீங்கள் மகுடம் சூடுவதற்கு முன் அதற்கான தகுதியையும், தியாகங்களையும் செய்வதற்கு தமிழ் தலைவர்கள் யாராவது தயாராக இருக்கிறீர்களா என்று எமது மக்களின் சார்பிலே கேள்வி எழுப்புகின்றோம்.

தமிழர்களின் காவல் தெய்வமாக விளங்கி உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் நான்கு படைகளை கட்டமைத்து சிங்கள தேசத்திற்கு உதாரணமாகவும், அதேவேளை உலகில் ஒரு நாடு எப்படி அறத்தோடு வழிநடத்தப்பட வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக தமிழர் தாயகத்தில் ஆட்சியை நிலை நாட்டிய எம் தேசியத் தலைவர் என்கின்ற பெருமைமிகு அடையாளம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மட்டுமே என்பதை மீள நினைவுபடுத்துகிறோம்.

மேலும்,அந்த ஒப்பற்ற தலைவனுக்கு பின் புதிதாக ஒரு தேசியத் தலைவருக்கோ அல்லது இரண்டாம் தேசியத் தலைவருக்கோ தமிழினத்தில் இடமில்லை என்பதையும் ஆணித்தரமாக நாம் பதிவு செய்கின்றோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Story

சிஐடியிடம் சிக்கியிருந்த மைத்திரி! அமெரிக்க அதிகாரியுடன் மந்திராலோசனை?

Next Story

கனடா வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் அனுரவிடம் விடுத்துள்ள கோரிக்கை