தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் இரகசிய திட்டம்

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் இல்லை என சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி பாரிய பிரச்சாரத்தை எதிர்வரும் சில தினங்களுக்குள் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என்ற பொதுக் ருத்தை நாட்டில் உருவாக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளதால் அதற்குள் தேர்தலை நடத்த முடியாது எனவும் அறிவிக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சிகளுக்கு தெரியவந்துள்ளது.

அரச ஊடகங்கள், தனியார் ஊடகங்கள் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி இக்கருத்தை நாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கான திட்டங்களை அரசாங்கம் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

சமூக ஊடகங்களை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் இரகசிய திட்டம் | Srilanka Postpone Elections

அரசாங்கத்திற்கெதிராக தயாராகும் கூட்டணி

எவ்வாறாயினும் உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்கட்சிகள் அனைத்தும் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் எக்காரணம் கொண்டும் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைக்க முடியாது என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் இரகசிய திட்டம் | Srilanka Postpone Elections

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சட்டவிரோதமாக செயற்பட்டால், அரசாங்கத்துடன் கட்சிகள் இல்லாத ஏனைய அனைத்து கட்சிகளும் அரசியல் குழுக்களும் ஒன்றிணைந்து கூட்டமைப்பை உருவாக்கும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்காக நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட தொழில் வல்லுனர்கள் பலர் ஒன்றிணைந்துள்ளதாகவும், இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் மற்றும் குழுக்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous Story

தேர்தல் தாமதமாகாது-ஆணையாளர்!

Next Story

இனி பெண்கள் படிக்கவே கூடாது.. மூடப்பட்ட பல்கலை. கதவுகள்..  கதறி அழும் பெண்கள்!