தேர்தலுக்கு ரெடி: மலேசிய பார்லி., கலைக்கப்பட்டது

மலேசிய பார்லி., கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று(அக்.,10) அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும். பல்வேறு எதிர்ப்புகள், சிக்கலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், இஸ்மாயில் சப்ரி யாகூப் தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் சிலவும் கூட, இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்ததால், எதிர்கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஊழல் வழக்கில் சிக்கி 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். அவர் அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேளையில் அம்னோவின் நடப்பு தேசியத் தலைவரான சாஹித் ஹமிதி, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அண்மையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

latest tamil news

இதனால் கடந்த ஒரு மாதமாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்புக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்ததை அடுத்து, அவர் பார்லி.,யை கலைப்பதாக இன்று அறிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பார்லி மெண்ட் கலைப்பு குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம் முதலே, இந்தப் பொதுத்தேர்தலில் மலேசிய இந்தியர்கள் எந்த அணியை ஆதரிப்பார்கள் என்பது குறித்த விவாதங்கள் தொடங்கி உள்ளன.

Previous Story

2500  கோடி ரூபாய் இன்றி தத்தளிக்கும் கப்பல் - ஒருநாள் தாமதக் கட்டணம் 110 கோடி ரூபாய் 

Next Story

இலங்கை:பொருளாதார வீழ்ச்சிக்கு ஊழலே காரணம் - சர்வதேச நாணய நிதியம்