தேர்தலா தேசத் துரோகம்!

-நஜீப்-

உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல் விட்டதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது இப்படி சொல்லி இருப்பது எதிரணி அரசியல்வாதியல்ல. ஆளும் தரப்பில் ராஜபக்ஸாக்களுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும் ரோஹித்த அபேகுனவர்தன.

இதற்க்கிடையில் மாகாண சபைத் தேர்தலைத் நடத்தாமல் தவிர்ப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதி மன்றம் மீண்டும் உறுதி செய்திருக்கின்றது. இதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல்தான் முன்கூட்டி வரப் போகின்றது என்றும் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றது.

A corona-clouded election in Sri Lanka sets a new welcome trend | South Asia Monitor

ஆனால் இந்தத் எந்தத் தேர்தல்களும் நடக்க மாட்டாது என்பது நமது கருத்து. நாடு பொருளாதார ரீதியில் ஸ்தீரமாகும்வரையில் எந்தத் தேர்தலும் நடக்கமாட்டாது என்றுதான் அதிகாரத்தில் இருப்போரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இன்னும் இரண்டு வருடங்களில் நிலமை சீராகும் என்றார்கள். இன்னும் 5 அல்லது 6 வருடங்களில் என்றார்கள். 2048 என்றும் ஒரு கதை இருக்கின்றது.

2048 என்பது ஜனாதிபதி ரணிலே நேரடியாக சொல்லி வருகின்ற கருத்து. எனவே அதுவரையும் தேர்தல் வேண்டும் என்று கேட்பதும் அதற்காகப் போராடுவதும் தேசத்துரோக குற்றமாகவும் புதிய சட்டத்தில் உள்வாங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்க முடியும்.

நன்றி: 11.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஜனாதிபதியின் அவசர அழைப்பு! பொதுஜன பெரமுனவிற்குள் வெடித்தது கடும் மோதல்

Next Story

மாடுகளுக்கு தொற்று நோய் குர்பான் விவகாரத்தில் உலமா சபை பதில் என்ன?