-நஜீப்-
மிகிந்தலை என்பது இலங்கை வாழ் பௌத்த மக்களுக்கு முக்கியமானதொரு இடம். இங்குதான் நாட்டில் பௌத்தம் தோன்றியது. இன்று அந்தப் புகழ் பெற்ற ராஜமஹா விகாரையில் பிரதான தேரர் வலவான தர்மரத்தின தேரர். தற்போது இவர் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
ஜனாதிபதி ரணில் மற்றும் பிரதமர் தினேஷ் முகத்திற்கே சொல்ல வேண்டியவற்றை சொல்லியும் வருகின்றார். அத்துடன் இவர் இப்படியும் சில வார்த்தைகளை பேசி வருகின்றார்கள். இந்த நாட்டை சீரழித்த ராஜபக்ஸாக்களை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.
ராஜாக்கள் தாமாக ஒதுங்கிக் கொள்ளாது போனால் அவர்களை மக்கள் ஒதுக்க வேண்டும். இன்னும் மக்கள் அவர்கள் பின்னால் போவார்களாக இருந்தால் இவர்களை விடக் கேவலமான மனித எருமைகள் உலகில் வேறு எங்கும் இருக்க மாட்டாது என்றும் அவர் உபதேசம் பண்ணி வருகின்றார்.
அத்துடன் இனவாதத்தை முன்னிருந்த போலியான கருத்துக்களை தேரர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட பரப்புரைகளையும் அவர் வன்மையாகக் கண்டிக்கின்றார்.
நன்றி- 30.10.2022 ஞாயிறு தினக்குரல்





