தேசிய மட்டக் கட்டுரைப் போட்டி-2021

கண்டி-உடதலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர்களும் அந்த மண்ணைச் சேர்ந்தவர்களும் இணைந்து நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்து ‘நூற்றாண்டுக்கு நூறு நிகழ்ச்சிகள் தேசத்துக்கோர் நூற்றாண்டுக் காட்சிகள்’ என்ற தொனிப் பொருளில் நிகழ்ச்சிகளை நடாத்துகின்றனர்.

அதில் ஓரங்கமாக கட்டுரைப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இது ஐந்து பிரிவுகளில் நடாத்தப்படுகின்றது. முதலிரு பிரிவுகளில் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் இந்த மண்ணைச் (வத்தேகெதர, கலதெனிய, மடிகே-உடத்தலவின்ன) சார்ந்தவர்கள், அவர்களது சந்ததியினர் உலகில் எங்கு வாழ்ந்தாலும் போட்டியில் பங்கு கொள்ள முடியும்.

மூன்றாம் நான்காம் பிரிவுகள் திறந்த போட்டி. இதில் தேசிய சர்வதேச மட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ள முடியும். ஐந்தாம் பிரிவில் தேசிய மட்டத்தில் தரம் பத்துக்கு மேல் படிக்கின்ற பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ள முடியும்.
அனைத்துக் கட்டுரைகளும் 1500 சொற்கள் வரை அமைய வேண்டும்.

1. முஸ்லிம் சமூகப் பாடசாலைகளும் பிற சமூகப் பாடசாலைகளும் ஒரு ஒப்பு நோக்கு.
(வயது 20 முதல் 30 வரை)
2. முஸ்லிம் சமூகத்தில் ஆண்கள் கல்வியில் பின்னடைந்து வருகின்றனரா?
(வயது 31 முதல் 40 வரை)
3. முஸ்லிம் சமூக கட்டமைப்பு மறுசீரமைப்பு பற்றிய உங்கள் பார்வை.
(வயது 41 முதல் 50 வரை)
4. நீங்கள் முஸ்லிம் சமூகத்துக்குச் சொல்லும் அறிவுரைகள்.
(வயது 50 மேல்)
5. இன நல்லிணக்கத்துக்கான உங்கள் ஆலோசனைகள்
(பாடசாலை மாணவர்களுக்கானது)

முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு நூற்றாண்டு நினைவாக கனதியான விருதுகளும் பரிசில்களும் வழங்கப்படும். இன்னும் முதல் பத்து இடங்களுக்கு தேசிய சர்வதேச பிரபல்யங்களின் கையொப்பத்துடன் தரமான சான்றிதழ்கள் வழங்கப்படும். கட்டுரைகள் அனைத்தும் 31.12.2021 வரை ஏற்றுக் கொள்ளப்படும் அவை

100 FOR 100

THE SECRETARY

PEOPLE’S COUNCIL FOR  THE CENTENARY

31/7 MADIGE, UDATALAWINNA,

KANDY – SRI  LANKA

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நேசத்துடன் கேட்டுக் கொள்கின்றோம். விண்ணப்பதாரிகள் தமது பெயர் முகவரிகளுடன் தேசிய அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் குறித்து அனுப்புவது கட்டாயமாகும்.

Previous Story

அப்துல் கதிர்க் கான்

Next Story

அழைப்பு