தேசிய கீதம் இசைக்கும் போது சிறுநீர் கழித்த ஜனாதிபதி – 6 ஊடகவியலாளர்கள் கைது

அரசு நிகழ்ச்சி ஒன்றில் தெற்கு சூடான் அதிபர் சல்வா கீர் மயர்டிட் தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த காணொளியை வெளியிட்டதாக கூறி ஆறு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு ஆபிரிக்க நாடான தெற்கு சூடானின் அதிபர் சல்வா கீர் மயர்டிட்(71), அரசு நிகழ்ச்சி ஒன்றில் தனது கால்சட்டையில் சிறுநீர் கழித்தது ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

(இதனை ஒரு செய்தியாக மாட்டும் பாருங்கள். மனிதனை அவமானப்படுத்தும் நோக்கிலான பதிவல்ல இது. இவர் கடுமையான நீழிவு நோயாளி. அதானால் இந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் SLGN)

கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் திகதி புதிதாக கட்டப்பட்டு இருந்த சாலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில், நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் போது அதிபர் சல்வா கீர் மயர்டிட் அவரது கால்சட்டையில் சிறுநீர் கழித்தது அங்குள்ள கமராக்களில் பதிவானது.

ஜூலை 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றதில் இருந்து சல்வா கீர் மயர்டிட் அதிபராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் குறித்த காணொளி காட்சிகள் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும், அது குறித்த காணொளி காட்சி ஒன்று இணையத்தில் தற்போது பரவ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6 பத்திரிகையாளர்களை ஜனவரி 3ம் திகதி இரகசிய உளவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதேவேளை, ஊடகவியலாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு (CPJ) கோரிக்கை விடுத்துள்ளது.

Previous Story

ஐயா கால அவகாசம்!

Next Story

உலகில் முதல் ரோபோ வழக்கறிஞர்.!