தெளிந்த ஆறாக இந்தியா!

Modi signal

-யூசுப் என் யூனுஸ்-

உலக அரங்கில் வல்லாதிக்க சமநிலை மாறி வருகின்ற இந்த கட்டத்தில் இந்தியா மிகவும் தெளிவான ஒரு வெளியுறவுக் கொள்கையுடன் பயணிக்கின்றது. அது முற்று முழுதாக ராஸ்யாவின் பிடிக்குள்ளும் வராது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கும் பணியாது சீனாவையும் சமாளித்துக் கொண்டு காய்நகர்த்தி வருகின்றது.

தனக்கு ஏற்பட்டிருக்கின்ற பின்னடைவை இந்தியாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டால்தான் சமாளிக்க முடியும் என்று உணர்ந்திருக்கின்ற அமெரிக்கா, தனது இராணுவ பொருளாதார கூட்டமைப்பில் இந்தியாவை இணைத்துக் கொள்ள பல்வேறு வழிகளிலும் முயன்று வந்திருகின்றது. இன்றும் அந்த முயற்சிகள் தொடர்கின்றன.

ஆனால் அமெரிக்காவின் வலைக்குள் சிக்குப்படாமல் இந்தியா தெளிந்த ஆறு போன்று தனது பயணத்தைத் தொடர்கின்றது. அப்படி இந்தியாவுக்கு அமெரிக்காவுடனோ ரஸ்யாவுடனோ கூட்டுச்சேர வேண்டும் என்ற எந்த தேவையும் கிடையாது. இராணுவ, பொருளாதார ரீதியில்   அது வளமாகத்தான் இருக்கின்றது. அப்படி இருக்க ஒரு கூடாரத்துக்குள் நுழைந்து எதிரிகளை தேடிக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு கிடையாது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் புத்திகூர்மையானதும் விஞ்ஞானபூர்வமானதாகவும் அமைந்திருப்பதை நாம் பார்க்க முடியும். வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது ஒரு நல்ல முன்னுதாரணம் என்பது நமது கருத்து.

நன்றி: 18.06.2023 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

மாயமான நீர்மூழ்கிக் கப்பல்: தொடரும் தேடுதல்!

Next Story

மோதிக்கு ஜோ பைடன் அதிக முக்கியத்துவம் தருவது ஏன்?