துரத்தப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச…!

“அரச ஆதரவாலர்களுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் இடி ”

நுவரெலியாவில் மலர், செடிகள் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஷிரந்தி ராஜபக்சவிடம் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.நுவரெலியாவிற்கு மலர் செடிகள் கண்காட்சி இன்று ஆரம்பிக்கவிருந்தது. அந்நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ச அங்கு சென்றிருந்தார்.

இதன்போது அரலியா ஹோட்டல் பெட்ரோல் கொட்டகைக்கு அருகில் உள்ள மக்கள் அவரை பார்த்து ஏளனம் செய்து, சாலையை அடைத்துள்ளனர். இதனால் அவர் விழாவில் கலந்து கொள்ளாமல் மீண்டும் கொழும்பிற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் வீடுகளுக்கு பலத்த இராணுவ பாதுகாப்பு?

அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதியின் இல்லம் முற்றுகையிடப்பட்டு இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சற்றுமுன்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கொழும்பு மிரிஹான பிரதேசத்தில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள பகுதியில் அவரது வீட்டுக்கு செல்லும் வழியை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தி வருவதுடன் போராட்டகாரர்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், பொலிஸாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மொரட்டுவையில் மோசமடையும் நிலைமை: விசேட அதிரடிப்படையினர் களத்தில்

மொரட்டுவ பகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் தீவிர நிலையை  அடைந்துள்ளது. இதன் காரணமாக பதற்றத்தைத் தணிக்க விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு

கொழும்பின் புறநகர் மொரட்டுவையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தும் பொதுமக்கள், மொரட்டுவை நகர முதல்வர் சமன் லால் பெர்ணான்டோவின் வீட்டுக்கு கல்லெறிந்ததை அடுத்தே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரிஹனையில் நேற்று ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்துக்கு செல்லும் பாதை முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து அங்கு வன்முறைகளும் இடம்பெற்றன.

இந்தநிலையில் இன்று மொரட்டுவை, புத்தளம் போன்ற பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அமைச்சர் பந்துல வீடும் முற்றுகை!

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடும் சற்று முன்னர் சுற்றி வளைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியின் இல்லம் முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் போது இராணுவ வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த போராட்டத்தை தொடர்ந்து கொழும்பில் உடன் அமுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடும் சற்று முன்னர் சுற்றி வளைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன

பேரெழுச்சி காணும் மக்கள் போராட்டங்கள்! ஜனாதிபதி அவசர கூட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில்  அவசர கூட்டம் ஒன்று தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இந்த கூட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் நேற்று இரவு நேற்றிரவு ஏற்பட்ட சம்பவம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபக்ஷர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொதுமக்களின் சீற்றம் அதிகரிக்கிறது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்கள் சீற்றம் வேகமாக அதிகரித்து வருகிறது.

மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தொடர்வதை அடுத்து, சமூக ஊடகங்களில் ராஜபக்சக்களுக்கு எதிரான கோபம் அதிகரித்து வருகிறது.

சமூக ஊடக பயனர்கள், பல முக்கிய பிரமுகர்கள் உட்பட, தற்போதைய விடயங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் ராஜபக்ஷ நிர்வாகத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளனர்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக ‘வெள்ளை துணி’ பிரசாரம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பொது மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடரவுள்ளன.

நெலும் பொக்குண திரையரங்கிற்கு வெளியே வெள்ளைத் துணி பிரசாரம் ஆரம்பிக்கப்படுவதால் வாகனங்களின் பக்கவாட்டு கண்ணாடியில் வெள்ளைத் துணி கட்டப்படவுள்ளன. நாளை மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பிரசாரம் எதிர்வரும் வாரத்தில் அதிகளவான வாகன ஓட்டிகள் பக்கவாட்டுக் கண்ணாடியில் வெள்ளைத் துணியைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சங்கிலித் தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை இரவு வாகன ஓட்டிகள் ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு எதிராக தங்கள் ஒலி எழுப்பிகளை ஒலிக்கச் செய்தனர்.

இதற்கிடையில், சில வணிக வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அவற்றின் மின்பிறப்பாக்கிகளை இயக்க எரிபொருள் தீர்ந்துவிட்டதால் நேற்று முழு இருளில் மூழ்கின.

தினக்குரல்

ஆளுங்கட்சி எம்பியை நோக்கி முட்டை வீச்சு தாக்குதல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த வாகனம் மீது இன்று முட்டை வீச்சு தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது

வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளை இவ்வாறு  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர் ஆளுங்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் ஊரடங்கு

மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 யாழ்.நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுங்கைப்பில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், அதனை குழப்பும் வகையில் அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியோர் மீது செருப்படி விழுந்துள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு ஐனாதிபதிக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானது.

இதனையடுத்து அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவர் மீது செருப்படியும் விழுந்துள்ளது இந்நிலையில் பதற்றத்தை தணிப்பதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் சிலர் காயமடைந்தனர்.

அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் கட்சியினர் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உமாச் சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேசமயம் நாட்டின் தேசியக்கொடி கேட்பாரற்று  பேருந்தின் ஒன்றின் கீழே வீசி எறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

ராஜபக்சாக்கள் நாட்டைவிட்டு தப்பியோட்டடம் ?

Next Story

இன்றுடன் தீர்ந்தது டீசல்!   பெரும் நெருக்கடியில் இலங்கை: ராணுவம் குவிப்பு!