திரைக்குப் பின்னால் சாலி!

நஜீப்

திலினி பிரியமாலி தற்போது ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு நாமம். இவர் வெரும் எட்டாம் வகுப்பு மட்டுமே கல்வி பயின்றிருக்கின்றார் இவர் தந்தை ஒரு கூலித் தொழிலாளி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி சமூக ஊடகங்களில் கதைகள். இந்தக் கதைகள் உண்மையோ பொய்யோ> ஆனால் இவர் பார்த்திருக்கும் வேலையானது ஹொலிவூட் படங்களையும் விஞ்சிய கதையாக இருக்கின்றது.

நாட்டில் உள்ள நெருக்கடிகள் மற்றும் தனி நபர்களின் பலயீனங்கள் என்பவற்றை தனக்குச் சாதகமாக்கி அவர் 1000 கோடி வரை கொள்ளையடித்திருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றதது. பெற்றோல் நெருக்கடியைப் பாவித்து டொலர்களை வைத்திருந்தவர்களை பேசி அதிக இலாபம் தருவதாக சொல்லி கோடிக் கணக்கில் பணமோசடி.

செல்வாக்கு மிக்க முறுத்தெட்டுவே தேரரின் வாகனத்தை  மூன்று கோடிக்கு விற்று பண மோசடி. தேரர்கள்> அரசியல்வாதிகள்> நடிகர்கள் விஐபிக்களை ஏமாற்றி காசு பறித்திருக்கின்றார். சில காலம் இந்தப் பேர்வழி ராஜபக்ஸாக்களுடன் நெருக்கமாக இருந்திருக்கின்றார். என்று சாடுகின்றார் ஊழலுக்கு எதிரான அமைப்புத் தலைவர்ஜேவிபி வசந்த சமரசிங்ஹ.

திலினியை அசாட் சாலி வழி நடத்தி இருக்கின்றார். அவர் காட்சட்டையை நான் தலையால் கலட்டுவேன் என்று முன்னாள் விமனப்படை அதிகாரியும் புலனாய்வு ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க பகிரங்கமபாக கூறி வருகின்றார்.

நன்றி:16.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாக்:தலைமை நீதிபதி  சுட்டுக்கொலை

Next Story

ஹாரிபாட்டர் பட நடிகர் மறைவு