திடீரென நடந்த பயங்கரம்..

சீன கடல் பரப்பை

கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா!

போர் தொடங்கியதா?

எம்ஹெச்-60ஆர் சீ ஹாக் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேரும், எஃப்/ஏ-18எஃப் சூப்பர் ஹார்னெட் போர் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அனைவரும் பாதுகாப்பாகவும், நலமுடன் இருப்பதாகவும், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அமெரிக்க கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

US Navy China

நேற்று பிற்பகல் 2:45 மணியளவில், யு.எஸ். பசிபிக் கடற்படை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விபத்து குறித்து பதிவிட்டிருந்தது, “வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எம்ஹெச்-60ஆர் சீ ஹாக் ஹெலிகாப்டர் தென் சீனக் கடல் நீரில் விழுந்தது” என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வணிகக் கப்பல்கள் மீது சமீப காலமாக தாக்குதல் நடத்தி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பல் கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கப்பல், வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள கிட்சாப் கடற்படை தளத்தை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது.

துறைமுகத்திற்கு வந்த பின்னர், இக்கப்பல் சேவையிலிருந்து விடுவிக்கப்படும். இதேபோல், யுஎஸ்எஸ் ஹாரி எஸ். ட்ரூமன் என்ற மற்றொரு விமானம் தாங்கி கப்பலும் மத்திய கிழக்கில் பணியமர்த்தப்பட்டிருந்த போது, சமீப மாதங்களில் பல விபத்துக்களைச் சந்தித்தது.

அமெரிக்க கடற்படை கப்பலில் விமானங்கள் விபத்தில் சிக்குவது இது முதல் முறை கிடையாது. இந்த முறை அமெரிக்க விமானங்கள் விபத்தில் சிக்கியது தென் சீனக்கடலில்.

இந்த கடலை கைப்பற்ற அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. காரணம் உலகில் நடைபெறும் கடல் போக்குவரத்து வர்த்தத்தில் 1/3  பங்கு இந்த கடல் வழியாகத்தான் நடக்கிறது. மட்டுமல்லாது இந்த கடலின் கீழ் ஏகப்பட்ட எண்ணெய் வளங்கள் இருக்கின்றன. மேலும் உலகில் உள்ள மீன் வளங்களில் இந்த பகுதி சுமார் 10% வளங்களை கொண்டிருக்கிறது.

எனவே இதனை கைப்பற்ற அமெரிக்க மிகப்பெரிய பிளானை போட்டு வருகிறது. முதலில் தைவானுக்கு சப்போர்ட் செய்து, அதன் மூலம் சீன விவகாரங்களில் தலையீடு செய்யலாம் என்றும், பின்னர் கடல் பகுதியை கைப்பற்றலாம் எனவும் திட்டமிட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில், அமெரிக்க கப்பலில் இருந்து புறப்பட்ட ஒரு போர் விமானமும், ஹெலிகாப்டர் ஒன்றும் விபத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை எல்லையை தாண்டியதாக கூறி சீனா சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Previous Story

සෙව්වන්දිට පියුමිට පද්මෙට ශෝෂල් මීඩියාවල ලැබුණු ඉඩ කෝ අද දකුණු ආසියාව දිනපු ෆාතිමා දුවට

Next Story

போரை முடிப்போம்..