திக் திக் பயணம்! கடலில் ரஷ்யா ஆடும் கேம்!

BEIJING, CHINA - JUNE 25: Russian President Vladimir Putin (L) shakes hands with Chinese President Xi Jinping during a signing ceremony in Beijing's Great Hall of the People on June 25, 2016 in Beijing, China. Russian President Vladimir Putin is in China to discuss more economic and military cooperation between the two countries. (Photo by Greg Baker-Pool/Getty Images)

ரஷ்யாவில் இருந்து சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றுக்கு எண்ணெய் கொண்டு செல்ல மிகவும் ரிஸ்க்கான பயணங்களை பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் எடுத்து வருகிறதாம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதை விட மிகவும் ரிஸ்க்கான பயணத்தை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகிறதாம்.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகளும் ஐரோப்பாவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. ஏற்கனவே ரஷ்யா ஸ்விப்ட் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதனால் சர்வதேச அளவில் பணப்பரிவர்த்தனை செய்வதில் இருந்து ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ரஷ்யா மீதான இந்த பொருளாதார தடைகளை மேற்கு உலக நாடுகள் இப்போதைக்கு நீக்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

ரஷ்யா பல நாடுகள் ரஷ்யாவின் எண்ணெயை நம்பி உள்ள நிலையில் தற்போது உலகம் முழுக்க கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போர் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைந்துள்ளது.

சீனா தொடங்கி பல நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை நம்பி இருக்கின்றன. அதிலும் தற்போது சீனா, இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில், தள்ளுபடியில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன.

பொருளாதார தடை ஆனால் ரஷ்யாவில் இருக்கும் இந்த கச்சா எண்ணெயை ஆசியாவில் இருக்கும் மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது மிகுந்த சிரமமான காரியமாக மாறி உள்ளது.

பொதுவாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் தனியார் கப்பல் நிறுவனங்களில் ஏற்றப்பட்டு நேரடியாக சீனாவிற்கு வரும். அங்கிருந்து இந்தியாவிற்கு செல்லும். சில சமயம் நேரடியாக கடல் வழியாக இந்தியாவிற்கு வரும். இதற்காக தனியார் கப்பல் நிறுவனங்களில் ராட்சச சரக்கு கப்பல்கள் பயன்படுத்தப்படும்.

ரஷ்யா எண்ணெய் ஆனால் தற்போது ரஷ்யா மீதான பொருளாதார தடை காரணமாக தனியார் கப்பல் நிறுவனங்கள் ரஷ்யாவின் எண்ணெயை கொண்டு வர மறுக்கின்றன. ரஷ்யாவின் எண்ணெய்யை சுமந்து சென்றால் தங்களின் கப்பலுக்கு சர்வதேச கடல் பாதையில் தடை விதிக்கப்படும் என்று அச்சத்தால் இந்த தனியார் நிறுவனங்கள் தங்கள் கப்பல்களை கொண்டு செல்ல மறுத்து வருகின்றனவாம்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எங்கள் கப்பலுக்கு தடை விதிக்கும் என்று இந்த நிறுவனங்கள் நினைக்கிறதாம். கச்சா எண்ணெய் இதன் காரணமாக ரஷ்யாவில் இருந்து எண்ணெயை மற்ற நாடுகளுக்கு எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் பல நாடுகள் குழம்பி உள்ளன.

இந்த நிலையில்தான் ரஷ்யாவில் இருக்கும் கோஸ்மினோ துறைமுகத்தில் இருந்து சிறிய கப்பல்களில் எண்ணெய் பீப்பாய்களை ஏற்றி அதை தென் கொரியாவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு தென் கொரியா வியாபாரிகளிடம் எண்ணெயை விற்று, பின்னர் அங்கிருந்து பெரிய கப்பல்களில் சீனா, இந்தியாவிற்கு எண்ணெய்யை அனுப்பும் வழி முறையை ரஷ்யா கையில் எடுத்துள்ளது என்கிறார்கள்.

ஏற்றுமதி அதாவது நேரடியாக எண்ணெயை அனுப்பினால் சிக்கல் என்பதால் சிறிய சிறிய கப்பல்களில் அனுப்புகின்றனர். இதனால் இது போன்ற கப்பல்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் டிராக் செய்வது சிக்கலாகி உள்ளதாம். சிறிய கப்பல்கள் பல கம்பெனி பெயர் இல்லாமல் சுற்றுவதால் எந்த நிறுவனத்திற்கும் எதிராக அமெரிக்கா நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

கிட்டத்தட்ட கிழக்கு சைபீரியா பசிபிக் பெருங்கடல் முழுக்க எண்ணெய் வர்த்தகம் இப்போது சிறிய கப்பல் மூலம்தான் நடக்கிறதாம். சிறிய கப்பல் சிறிய கப்பலில் தென் கொரியா சென்று அங்கிருந்து பெரிய கப்பலில் எண்ணெய் மற்ற நாடுகளுக்கு செல்கிறதாம்.

தென் கொரியா சென்று அங்கு எண்ணெய் விற்கப்படுவதால் இது ரஷ்யா எண்ணெயாக கணக்கில் எடுக்கப்படுவது இல்லை. தென் கொரியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயாக கணக்கு எடுக்கப்படுகிறது. ஆனால் இப்படி எண்ணெயை ஏற்றுமதி செய்வதில் பெரிய ரிஸ்க் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படி செல்கிறது? பல லிட்டர் பேரல் எண்ணெய்களை ரஷ்யா இப்படி சிறிய கப்பல்களில் பல ஆயிரம் கிலோ மீட்டர் அனுப்புகிறது.

இதனால் கடல் பயணம் மிகவும் ரிஸ்க்கானதாக இருக்கிறது. அதேபோல் கப்பல்கள் இடையில் விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. சிறிய கப்பல்கள் என்பதால் உறுதியாக ஏற்றுமதி செய்யப்படும் என்பதிலும் நிறைய சவால்கள் உள்ளன.

இதெல்லாம் போக எண்ணெய் கப்பல்களை கடல் கொள்ளையர்கள் தாக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. கடல் கொள்ளையர்கள் சிறிய கப்பல்களில் எண்ணெய் செல்வதால் அதை கடற் கொள்ளையர்கள் தாக்குவார்களோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

திக் திக் சூழ்நிலையில்தான் இந்த எண்ணெய் வர்த்தகம் நடக்கிறதாம். அதே சமயம் பெரிய கப்பல்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்யாத காரணத்தால் பல சிறிய ஊழியர்கள், சின்ன கப்பலை வாங்கி, அதை வைத்து எண்ணெய் ஏற்றுமதியை செய்து நல்ல லாபம் பார்க்கிறார்கள்.

இதனால் ரஷ்யாவில் சிறிய கப்பல்களின் வியாபாரம் அதிகரித்துள்ளதாம். இதை தடுக்க முடியாமல் அமெரிக்காவும் கையை பிசைந்து வருகிறது. ரிஸ்க் பயணம் அதோடு சிறிய கப்பல்களில் ஏற்றுமதி செய்ய பெரிய அளவில் செலவு ஆவது இல்லை. பெரிய கப்பல்கள் ஏற்றுமதி செய்வதை விட குறைவான விலையையே இந்த சிறிய கப்பல்கள் கேட்கின்றன.

இதனால் பயண செலவு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் எண்ணெய்களில் கிழக்கு சைபீரியா பசிபிக் பெருங்கடல் வழியாக செல்லும் எல்லா எண்ணெய் கப்பல் எண்ணெய்களையும் குறைந்த விலையில் வாங்க சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தென்கொரியா செல்லும் எண்ணெயை அப்படியே வாங்க சீனா முடிவு செய்துள்ளதாம்.

Previous Story

சு.க. அவலம்...ஐயோ சிரிசேன!

Next Story

கடைசிக் கடிதம் கடவுளுக்கு!