தான் ‘புனிதன்’ வழக்கு வாபஸ்!

நஜீப்

நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல்

News | The Morning

வர்த்தகர் ஒருவரிடம் இரண்டு கோடி ஐம்பது இலட்சம் கப்பம் வாங்கிய குற்றத்திற்கு முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்ஹ அதில் குற்றவாளி என்று தீர்ப்பு.

அதற்கு இரண்டு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனையும் பெற்ற பணத்தையும் நஸ்டஈடாக வர்த்தகருக்கு ஒரு மில்லியனும் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை பிரசன்ன நிராகரித்தார்.

தான் புனிதமானவன் என்று அதிலிருந்து விடுபட அவர் மேன்முறையீடும் செய்திருந்தார். இந்த வழக்கில் பிரசன்ன சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜராகி வந்தார்.

வழக்கின் போக்கு தமக்கு வாய்ப்பாக இல்லை என்ற சட்டத்தரணி ஆலேசனைக்கு அமைய பிரசன்ன தான் புனிதன் என்ற வழக்கை வாபஸ் வாங்கி தான் ஒரு கப்பம்காரன் என்பதனை பகிரங்கமாக  ஏற்றுத் தனக்கு தவணை அடிப்படையில் அந்தப் பணத்தை திருப்பி ஒப்படைக்க வாய்ப்பும் கேட்டிருந்தார்.

Previous Story

මහින්ද සුදාට දුරකථයෙන් කතා කරයි ඇයි අපිට මෙහෙම කරන්නේ....(?)

Next Story

තඹුත්තේගම කොල්ලා ලෝකෙම හොල්ලයි...! | ජිනීවා වලදී ලංකාවට මාර තැනක් | ප්‍රතිභා කිව්ව සුපිරිම කතාව