தாஜுதீன் உயிருடனே எரிக்கப்பட்டார் – மைத்திரி

றக்பி வீரர் வசீம் தாஜுதீன் காருக்குள்ளேயே தீ வைத்து கொல்லப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“மோசடி மற்றும் ஊழலுக்கு தண்டனை வழங்கும் புதிய சட்டமூலமொன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லசந்த விக்கிரமதுங்க மற்றும் றக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோருக்கு என்ன நடந்தது? இப்போது அவர்களை குழியில் இருந்து மீட்க முடியாது.

காருக்கு தீ வைத்து றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொல்லப்பட்டார். அரச குடும்பத்து இளவரசர் ஒருவருடன் நட்பாக இருந்த பெண்ணுடன், தாஜுதீன் நட்பு கொண்டதால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.

உயிருடன் எரிக்கப்பட்ட தாஜுதீனின் உடலின் எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் கொழும்பு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், 2019இற்குப் பிறகு அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை.

“பாராளுமன்றத்தில் 100 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும், குற்றப் புலனாய்வுத் துறை அல்லது தடயவியல் மருத்துவரிடம் நீதிமன்றத்தில் நிரூபிக்கக்கூடிய எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Story

2024ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் பரீட்சை!

Next Story

தேர்தல் ஒன்றையாவது நடத்துங்கள் - தேசப்பிரிய