-நஜீப்-
நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல்
மறைந்த ருக்மன் சேனாநாயக்க நினைவு உரை கடந்த வாரம் நாடாளுமன்றில். அதில் ஹக்கீம் உண்மைக்குப் புறம்பாக பேசினார். பொய்கள் உண்மையாகிவிடக் கூடாது என்பதால் இந்தக் குறிப்பு.
“நெருக்கடியான 1988 களில் நாங்கள் அன்று ஜேவியுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். அப்போது எங்களுடன் ருக்மனும் இருந்தார். அந்தச் சந்திப்புக்களில் ஜேவிபி. உபதலைவர் உபதிஸ்ஸ கமநாயக்கவும் வந்து கலந்து கொண்டார்.” என்பது ஹக்கீம் கதை.
பார்ப்போர்-கேட்போர் மு.கா.தரப்பில் இதில் ஹக்கீம்தான் பங்கு கொண்டதாக எடுத்துக் கொள்வார்கள். ஹக்கீம் எதிர்பார்ப்பதும் அதைத்ததான். ஆனால் கதையும் கருத்தும் வேறு. கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்தது உண்மை. அதில் முழுக்க முழுக்க பங்கு கொண்டது மு.கா.ஸ்தாபகத் தலைவர் அஸ்ரஃப்.
இதில் ஹக்கீமுக்கு எந்தத் தொடர்புமில்லை. தனிப்பட்ட ரீதியில் அதை நாமும் அறிவோம். பேச்சுவார்த்தைகளுக்கு கமநாயக்க வந்ததாக ஹக்கீம் கூறுவது அவர் அறியாமை.
கமநாயக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதில் பங்குகொள்ளவில்லை. ஜேவிபி.சார்பில் D.M.ஆனந்த (திசாநாயக முதியன்சேலாகே நந்தசேன-வேறு பெயர்கள் :-அமல் மஹத்திய, மினுவன்கெட ஆனந்த தேரோ) என்பவர்தான் வந்தார்.
இது தொடர்பாக நாம் மு.கா.முன்னாள் செயலாளர் ஹசனலியை கேட்க, ஹக்கீம் விடுவது அண்டப்புளுகு. அப்போது ஹக்கீம் அகுரண-புஹார்தீன் நடாத்திய ‘பெயார்லைன்’ நிருவனத்தில் ஊழியராக தொழில் பார்த்து வந்தார்.
அந்த நாட்களில் மு.கா.வுக்கும் ஹக்கீமுக்கும் எந்த உறவும் இருந்ததில்லை. என ஹசனலி நமக்கு உறுதிப்படுத்தினார்.