தலையும் அரிவாளுமாக நின்றவன்!

-நஜீப்-

நன்றி ஞாயிறு தினக்குரல் 03.08.2025

සේපාල ඒකනායක මෝඩයෙක්ද වීරයෙක්ද? - Lifie.LK

கருப்பு ஜூலை: 13 இராணுவ வீரர்கள் கொலையுடன் எல்லே குனவன்ச தேரர் தலைமையில் கொழும்பில் வன்முறை துவங்கியது. அது சிறைச்சாலையையும் விட்டுவைக்கவில்லை.

சிறைக் கொலைகளைக் கட்டுப்படுத்த மேஜர் பீரிஸ் அங்கு சென்ற நேரத்தில் இத்தாலி-அலிதாலிய விமானக் கடத்தல் குற்றவாளி சேபால ஏகநாயக்க வெட்டப்பட்ட ஒரு தலையை தூக்கி இராணுவம் தமக்கு ஆதரவாகத்தான் வந்திருக்கின்றது என்ற நினைப்பில் சேர், எப்படி எங்கள் வேலை என்று கேட்க சேபாலவை தறுமாறாக உதைத்துத் தாள்ளினார் மேஜர் பீரிஸ்.

அப்போது சேபாலவின் மறுகையில் அரிவாள் இருந்தது. தான் எழுதிய புத்தகத்தில் மேஜர் இதனைப் பதிந்துமிருக்கின்றார். ராகமை புகையிரநிலைய அதிபர் அவரது மகன் கொலைகள், மேலும் பல தமிழ் இளைஞர்கள் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன் தீயில் எரிக்கப்பட்தை தான் நேரிலே பார்த்தாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியாவும் கூறுகின்றார்.

வன்முறையை அன்றைய அரசு தடுக்க முனையவில்லை எனவும் அவர் சாடுகின்றார்.

Previous Story

LTTE:பிரபாகரனுக்கு சுவிட்ஸர்லாந்தில் வீரவணக்கம்!

Next Story

எதிரணியும் புதிய கூட்டணியும்!