தன்னைத் தானே அழித்துக் கொள்வதற்குப் பெயர்தான் தற்கொலை. இந்த தற்கொலைகள் இன்று பல்வேறு காரணங்களுக்காக உலகில் நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
ஆனால் நாம் இங்கு பேசப் போவது சமூகம் தான் பாவிக்கின்ற புள்ளடியால் தனது பிரதிநிதித்துவத்தை தாமே அழித்துக் கொள்கின்ற ஒரு விடயத்தைப் பற்றியே. இதுவும் ஒரு தற்கொலையே!
177451 என்ற பெரும் எண்ணிக்கையான வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு இரு பிரதிநிதித்துவத்தை மட்டும் ஒரு சமூகம் வென்றெடுக்குமானால் அந்த சமூகம் தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தற்கொலை செய்து கொண்டது என்பதுதான் அதன் அர்த்தம்.
ஆலிம்களே, புத்திஜீவிகளே, பெரியவர்களே தாய்மார்களே, இளைஞர்களே உடன் பிறப்புக்களே இது விடயத்தில் நீங்கள் அடுத்தவர்களுக்கு இந்த நிலமைகளைப் புரியவைத்து சமூகத்தின் மற்றுமொரு பிரதிநிதித்துவத்துக்கான நல்ல வாய்ப்பு லாபீர் ஹாஜியாருக்குப் புள்ளடி போடுவதால் மட்டுமே வென்றெடுக்க முடியும். இதற்கு ஒத்துழைக்குமாறு சமூகத்தின் பேரால் அழைப்பு விடுக்கின்றோம்.