தமிழருக்கு தீர்வு நாடகமே.!

-நஜீப்-

தமிழருக்கு தீர்வுக் கதை பாம்பாட்டி அவ்வப்போது பெட்டியில் இருந்து அதனை வெளியில் எடுப்பது போலத்தான் கடந்த ஒரு தசாப்தங்களுக்கும் மேலாக நடந்து வருகின்றது. ரணில் அதிகாரத்துக்கு வந்தபோது இந்தப் பாம்பை அடிக்கடி வெளியில் எடுத்தார்.!

காரணம் இந்தியாவின் தயாவில் அரசு உயிர் வாழ்வதால் இந்தியாவைச் சமாளிக்க அப்படி. மாகாணசபைத் தேர்தல் விரைவில் என்பார்கள், அதிகாரப் பகிர்வு பிடி என்பார்கள். தீபாவளி, பொங்கள், சுதந்திரத்துக்கு முன் பின் திசம்பரில்..! பேசுவோம் வருங்கள் என பாம்பை வெளியில் எடுக்கும் போதெல்லாம் தமிழ் தலைவர்கள்  வித்தை பார்க்க  ஆவலுடன் அடிக்கடி கொழும்பு வந்து போனார்கள்.

ஆனால் கடந்த தேர்தலில் மொட்டுக்காரர்கள் 13ம் கிடையாது மாகாணசபையும் கிடையாது என்று சொல்லித்தானே 69 இலட்சம் வாக்குகளை சுருட்டினார்கள். அவர்கள் தயவில் உயிர் வாழும் ஜனாதிபதி ரணில் அரசு எப்படி தமிழருக்குத் தீர்வு தரும்-தரமுடியும்? என்ற சின்ன லொஜிக்கை கூட தமிழ் தலைவர்கள் புரிந்து கொள்ளாமல், ரணில் தரும் தீர்வை நம்பி தமிழர்களை  இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஏமாற்ற முடியும்.?

சுதந்திரத்தக்கு முன்னர் கதையில் பெரிசுகள் இதனைப் புரிந்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வைத்து வித்தை காட்டும் ரணில் எப்படித் தீர்வு தரமுடியும். இது சாத்தியமில்லை பெரியவரே.!

நன்றி: 18.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

UMA  செயற்பாடுகள் விரிவாகின்றன!

Next Story

ஓய்வு பெற்ற பொலிஸ்காரன்!