இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக தெரிவு இன்றைய தினம்(30.07.2023) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட இலங்கைத் தமிழரசு கட்சி தலைவர் குகதாசன், செல்வேந்திரன், நடராசா, மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச முன்னாள் தவிசாளர் சி.புஷ்பலிங்கம் ஆகியோரின் முன்னிலையில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில்,
1.தலைவராக : இரா.சாணக்கியன்-நாடாளுமன்ற உறுப்பினர்
2.செயலாளராக-ஞா.ஶ்ரீநேசன்-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
3.பொருளாளராக – சீ.யோகேஸ்வரன்-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
4.உபதலைவராக-பா.அரியநேந்திரன்-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
5.உப செயலாளராக-தி.சரவணபவன்-முன்னாள் மேயர் மட்டக்களப்பு மாநகரசபை தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.






