-நஜீப்-
நன்றி ஞாயிறு தினக்குரல் 03.08.2025
தமிழரசுக்குள் இப்போது தொடர்ச்சியாக பனிப்போர் நடந்து கொண்டிருக்கின்றது. சிரிதரனை சிறுமைப்படுத்தி தம்மை வல்லுணர்களாக சமூகத்தில் முன் காட்சிப்படுத்தும் ஒரு முயற்சிதான் இந்த நிகழ்ச்சி நிரலில் அடங்கி இருக்கின்றது.
சம்பந்தன் மற்றும் மாவையை பாவித்துக் கொண்ட சட்டத்தார் இப்போது சீவிகே.யை துணைக்கு வைத்து காரியம் பார்த்து வருகின்றார். இந்த சோடிகள் தமது ஆங்கிலப் புலமையை வைத்து சாதிக்க முனைகின்றது.
எங்கள் தலைமையை தமிழர்கள் ஏற்றதால்தான் நமக்கு 33 சபைகள். 377 உள்ளாட்சி பிரதிநித்கள் மற்றும் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கன் என்று வேறு கதை விடுகின்றார்கள்.
சிரிதரன் மீதான இந்த வன்மம் பிரதேசவாதமா அல்லது காட்புணர்ச்சி மற்றும் ஆங்கிலப் புலமை என்ற ஆவணமா தெரியவில்லை.
இவர்கள் முன்னே மக்கள் அங்கிகாரம் பெற்ற சிரிதரன் ஏனோ பலயீனப் பட்டவராகத்தான் நமக்கும் தெரிகின்றார். இது தமிழர்களுக்கு ஆரோக்கியமானதல்ல.