தமிழரசின்: புதிய நாகரிகம்!

நஜீப்

நன்றி:15.02.2026 ஞாயிறு தினக்குரல் 

அண்மையில் தழிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் இதுவரை தலைவராக இருந்த சிரிதரனை தூக்கிவிட்டு அந்த இடத்திற்கு சாணக்கியனை நியமித்ததாக சட்டவல்லுணர் அறிவித்திருந்தார். அப்படி ஒரு தீர்மானமே அங்கு மேற்கொள்ளப்படவில்லை என்று ஏனையோர் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் சீவிகே. சிவஞானமும் இதில் இருக்கின்றார். இதற்கிடையில் புதிய தலைவரை வரவேற்று வடக்கு மற்றும் கிழக்கில் சில இடங்களில் புதியதலைவரை வரவேற்கும் பதாதைகள் போடப்பட்டிருந்தது. இது அரசியல் முதிர்ச்சி இல்லாதவர்கள் பார்த்த வேலை என்பது சிவஞானத்தின் பதிவாக இருந்ததை பார்க்க முடிந்தது.

பெனர் போட்டவர்களை திட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும். தீர்மானமே எடுக்காமல் அறிவிப்பைச் செய்தவர் மீது நிச்சயமாக எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இதே தலைமை கவனமாக நடக்கும் என்பது உறுதி. இது எந்தவகையான அரசியல் நாகரிகம் என்று  கேட்கத் தோன்றுகின்றது.

Previous Story

නායකහිමියන්ට නයා පෙන්නන්න ගිහින් වෙච්ච දේ

Next Story

கொழும்பு: IND vs PAK போட்டியால் திருவிழா