தப்பி ஓட  கோட்டா,மகிந்த! தயார் நிலையில் 5 விமானங்கள்: இந்திய ஊடகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடக் கூடும் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக கொழும்பில் ஐந்து விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த செய்தியில் மேலும்,

இலங்கையில் தேன்கூட்டில் கையை விட்ட கதையாக ராஜபக்ச  சகோதரர்கள் விழிபிதுங்கி போயுள்ளனர். கொழும்பு காலிமுகத்திடலில் 30 நாட்களாக அரசுக்கு எதிராக அமைதி வழியில்தான் மக்கள் போராடினர். சிறிதும் வன்முறையில்லாமல் இலங்கை அரசு பதவி விலக கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

இதனால் நெருக்கடிக்குள்ளான மகிந்த ராஜபக்ச  பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்னதாக கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.

ராஜபக்சவின் ஆதரவாளர்களின்  வன்முறை வெறியாட்டம் பொதுமக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனையடுத்து ராஜபக்ச ஆதரவாளர்களை  திருப்பி தாக்கி விரட்டியடித்தனர் பொதுமக்கள். இது தென்னிலங்கை முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.

இலங்கையில் ராஜபக்ச  ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலரது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் ராஜபக்ச ஆதரவு அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இதனிடையே தலைநகர் கொழும்பில் எந்த நிமிடத்திலும் புறப்படுவதற்கு தயார் நிலையில் 5 விமானங்கள் தயாராக உள்ளன. இந்த விமானங்களை இயக்க 8 விமானிகளும் தயாராக உள்ளனர் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Previous Story

JVPஅனுர குமார  அரசாங்கத்தை ஏற்கத் தயார்!

Next Story

ஏறாவூர் பல கோடி சொத்து சாம்பல்