தன்பாலினத்தவர்களுக்கு திருமண உரிமை: அவர்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்?

தன்பாலின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டபூர்வமாக்கக் கோரிய மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையின் முதல் நாளில், தனி நபர் சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல், சிறப்புத் திருமணச் சட்டத்தின் மூலம் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுமா என்பதை ஆராய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது

தன்பாலின திருமணம், இந்தியா, உச்ச நீதிமன்றம்

மறுபுறம், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 வது பிரிவுகளில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் கீழ், திருமணம் செய்து கொள்ள உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

சிறப்புத் திருமணச் சட்டம், 1954 மூலம், சாதி மற்றும் மதக் கலப்புத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன.

மீனாட்சி சன்யால் தன்பாலினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காகப் பணியாற்றும் ‘சப்போ ஃபார் ஈக்வாலிட்டி’ (Sappho for Equality) என்ற அமைப்பின் இணை நிறுவனர் ஆவார்.

அவர், இதை ஒரு பாலினத் திருமணம் என்று அழைப்பதை விட, திருமண சமத்துவ உரிமைகள் என்று அழைப்பதே பொருத்தம் என்று கருதுகிறார்.

திருமணம் செய்து கொள்ள உரிமை இருந்தால் அது அனைவருக்கும் இருக்க வேண்டும். சிறப்பு திருமணச் சட்டத்தின் 30 நாட்கள் முன் அறிவிப்பு விதி குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

கொல்கத்தாவில் இருந்து பிபிசி உடனான தமது உரையாடலில், “இது என்னையும் என் இணையையும் பற்றிய விஷயம் மட்டுமில்லை. நான் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரு செயற்பாட்டாளராக இருந்திருக்கிறேன். இதில் எங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளன. இப்போது ஒருவருக்குப் பாலினம் கடந்த ஈடுபாடு ஏற்பட்டால் அவர் அதற்கான உரிமையைப் பெற வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு திருமண சட்டம் குறித்து இவர் கருத்துக் கூறிய போது, “இந்த சட்டத்தின் 30 நாட்கள் முன் அறிவிப்பு விதி நீக்கப்படுமா? ஒரு பாலின உறவாளர்களின் அனுபவங்களைப் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டோம். தங்கள் அடையாளத்தால், வீட்டிற்குள்ளேயே பல வகையான வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பி, 30 நாட்கள் நோட்டீஸ் கொடுத்தால், இந்த நேரத்தில் குடும்பத்தினருக்குத் தெரிந்தால், அவர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்,” என்று வாதிட்டார்.

சிறப்பு திருமண சட்டம் என்பது என்ன?

தன்பாலின திருமணம், இந்தியா, உச்ச நீதிமன்றம்

சிறப்பு திருமண சட்டத்தின் பிரிவு 5இன் படி, திருமணம் செய்பவர் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், தவிர, திருமண அதிகாரி அலுவலகத்திற்கு வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் திருமணம் குறித்த அறிவிப்பைப் பொதுவில் வெளியிட வேண்டும்.

இந்தத் திருமணம் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள், யாரும் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லையெனில், திருமணம் நடத்தப்படும்.

இது குறித்து, வழக்கறிஞர் பிரதீக் ஸ்ரீவஸ்தவா, ‘சிறப்புத் திருமணச் சட்டம் பாலினச் சார்பற்றதாக இல்லை’ என்று கூறுகிறார். இச்சட்டத்தின் பிரிவு 4C, திருமண வயது, பெண்ணுக்கு 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் நிர்ணயிக்கிறது. மேலும், பிரிவு 4ன் கீழ் திருமணம் நடக்கவில்லை என்றால் அது செல்லாது என்று பிரிவு 24 மற்றும் பிரிவு 25 கூறுகின்றன.

‘ஹம்ஸஃபர் டிரஸ்ட்’ அமைப்பின் நிறுவனர் அசோக் காக், “சிறப்புத் திருமணச் சட்டம், வயது வந்த மற்றும் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளக் கூடிய இரண்டு இந்திய குடிமக்களுக்கிடையே தான் அவர்களின் விருப்பத்தின் பேரில் திருமணம் சாத்தியம் என்று கூறுகிறது. அதே சமயம், திருமணம் செய்ய இவர்கள் தகுதியானவர்கள் என்று மனநல மருத்துவர்களிடம் சான்றிதழைப் பெறலாம்.” என்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, சட்டரீதியாக, திருமணத்தின் அர்த்தம் உயிரியல் ரீதியான ஆணுக்கும் உயிரியல் ரீதியான பெண்ணுக்கும் இடையேயான உறவேயாகும் என்று வாதிடப்பட்டது.

இதில், ஆண், பெண் பாகுபாடு என்பதற்கான உறுதியான கருத்து இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

மறுபுறம், சட்டபூர்வமான எந்தவொரு உறவுக்கும் உரிமைகள் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெண்களின் உரிமைகளுக்காகப் பணியாற்றும் வழக்கறிஞர் வீணா கோடா மும்பையிலிருந்து தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், “திருமணம் என்பது சட்ட அங்கீகாரம் பெற்ற உறவு. இது ஒரு உறவைச் சட்டக் கட்டமைப்பிற்குள் பிணைத்து, பின்னர் ஒரு இணை அல்லது வாழ்க்கைத் துணையாக (சட்டப் பங்குதாரர்) ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, அவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக ஒரு குடும்பத்தை உருவாக்குகிறார்கள்; இதில் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன,” என்றார்.

என்னென்ன உரிமைகள் கிடைக்கும்?

தன்பாலின திருமணம், இந்தியா, உச்ச நீதிமன்றம்

ஒரே பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டால், வாழ்க்கைத் தூணை எண்று குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களிலும் முழு உரிமை கிடைக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

வழக்கறிஞர் வீணா கோடா கூறுகையில், ஓய்வூதியம், காப்பீடு, பணிக்கொடை, மருத்துவக் கோரிக்கை போன்ற பல உரிமைகளின் பயனாளிகளாக இவர்களை ஆக்குகிறது.

வழக்கறிஞர் பிரதீக் ஸ்ரீவஸ்தவா LGBTQ+ சமூகங்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து எழுப்பி வருகிறார்.

வீணாவின் கருத்தை முன்வைத்து, காப்பீடு, கருணைத் தொகை ஆகியவற்றில், நாமினி அல்லது வாரிசுதாரர்(ரத்த சம்பந்த உறவு) என்ற தேர்வுகள் வழங்கப்படுகின்றன என்று கூறுகிறார்.

இதன்படி, ஓரு பாலினத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டால், அவர்களும் ஓய்வூதிய உரிமையைப் பெறுவார்கள்.

அசோக் காக் கூறுகையில், நிதி விஷயங்களில் உதவி கிடைக்கும், ஆனால் இதுபோன்ற பல பிரச்சினைகள் கவனிக்கப்படவில்லை. ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அந்த நபரின் குடும்பத்தினர் அவரது இணையை மருத்துவமனைக்கு வர அனுமதிப்பதில்லை. மறுபுறம், ஒரு பாலினத்தவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க முயற்சிக்கும்போதும் பிரச்சனை வருகிறது.

இந்தியாவில் ஒருபாலினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. ஆனால், 2012-ம் ஆண்டு இந்தச் சமூகத்தின் மக்கள் தொகை 25 லட்சம் என அரசு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் ஐபியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை ஒன்று, பல நாடுகளில் தன்பாலினச் சேர்க்கையை ஏற்றுக்கொள்வது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, 2014-ம் ஆண்டு இந்த வரவேற்பு 15 சதவீதமாக இருந்தது. தற்போது 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தன்பாலினச் சேர்க்கையாளர்களுக்கு திருமண அங்கீகாரம் வழங்கினால், பல சட்டங்களிலும் திருத்தம் செய்ய நேரிடும் என்று வழக்கறிஞர் சோனாலி கட்வாசரா கூறுகிறார். ஏனெனில் இந்தியாவில் உள்ள பல சட்டங்களில் ‘தம்பதிகள்’ குறிப்பிடப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்காலத்தில் பல சவால்கள் வரலாம்.

ஒரே பாலின திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், திருமணத்தைப் பதிவு செய்யும் நேரத்தில், குடும்ப அமைப்பில் கணவன் – மனைவி என்ற பாத்திரங்களை அவர்கள் இருவரில் யார் எதை ஏற்கிறார்கள் என்பதைக் குறிப்பிடச் செய்யலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

அதாவது, அவர்கள் தங்கள் உறவில் தங்களைப் பற்றி வெளியிடும்படி கேட்கலாம்.

குடும்ப வன்முறை

“குடும்ப வன்முறை வழக்குகளில், வன்முறைக்கு எதிராகப் புகார் செய்ய ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இரு பெண்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டால், இருவரில் யார் குடும்ப வன்முறை புகார் அளிக்க முடியும்? மேலும் இரு ஆண்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொண்டால், அப்படி ஒரு வழக்கு வரும் போது, இருவரும் புகார் அளிக்க முடியுமா இல்லையா?” என்று கேள்வி எழுப்புகிறார் சோனாலி கட்வாசரா.

அத்தகைய சூழ்நிலையில், இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக, பெண்கள் பாதுகாப்புச் சட்டம், 2005 இந்தியாவில் கொண்டுவரப்பட்டது.

இதைத் தவிர, தன்பாலினச் சேர்க்கையாளர்கள், திருமணத்துக்குப் பின், ஏதேனும் காரணத்திற்காக விவாகரத்து கோர முடிவு செய்தால், பராமரிப்புக்கு யார் பொறுப்பு?

பராமரிப்பு உரிமை

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 125-ன் படி, தாம்பத்திய உறவில் கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் கோரும் உரிமை மனைவிக்கு, இருக்கும்.

அதே சமயம், ஒரு குடும்பத்தில், பெற்றோர் திருமணத்திற்குப் பிறகு ஒரு மகனிடமிருந்து பெற்றோரோ, கணவனிடமிருந்து மனைவியோ பராமரிப்பு கோரலாம், ஆனால் ஒரே பாலின திருமணத்தில், இந்த உதவியைப் பெற யாருக்கு உரிமை உண்டு? இருவரும் ஒருவரை ஒருவர் கோர முடியுமா?

தத்தெடுக்கும் உரிமை

தன்பாலின திருமணம், இந்தியா, உச்ச நீதிமன்றம்

வக்கீல்கள் வீணா கோடா மற்றும் சோனாலி கட்வாசரா ஆகியோர், “ஒரு பெண் அல்லது ஆணுக்கு, ஒரு குழந்தையை தத்தெடுக்கும் உரிமையைச் சட்டம் வழங்குகிறது. அதே சமயம், தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் தத்தெடுக்கும் ஆணுக்கும் 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது,” என்று விவரிக்கின்றனர்.

எழக்கூடிய சவாலை விளக்கும் இவர்கள், “ஒரே பாலின தம்பதிக்கு இதே உரிமை வழங்கபடுமா? அப்படி வழங்கப்பட்டால், யார் தாயார், யார் தந்தை என்று நிர்ணயிப்பது யார்?

ஒரு தம்பதி (கணவன் மனைவி) திருமணமாகி இரண்டு வருடங்கள் தாம்பத்தியம் நீடித்திருந்தால், அவர்கள் குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமையைப் பெறலாம் என்று சட்டம் சொல்கிறது.

அதே நேரத்தில், குழந்தைகளின் நலனுக்கு எதிரானது மற்றும் அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், தன்பாலினச் சேர்க்கையாளர்களுக்கு குழந்தையை தத்தெடுக்கும் உரிமையை வழங்கக்கூடாது என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் பராமரிப்பு

சட்டத்தின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையைப் பராமரிக்கும் உரிமை தாய்க்கு உண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன்பாலின சேர்க்கையில் விவாகரத்து வழக்கு வந்தால், குழந்தையைப் பராமரிக்கும் உரிமை யாருக்குக் கிடைக்கும்.

குழந்தையின் நலன் தான் சட்டத்தில் முதன்மையாகக் கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்தத் திருமணத்தில் யாருடைய உரிமைகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்.

சொத்துரிமை

குடும்பம் என்ற வரையறை சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மூதாதையர் மற்றும் தந்தையின் சொத்துக்களில் ஒருவருக்கு உரிமை உண்டு.

பாதுகாவலர் தனது சொத்தில் பங்கு கொடுக்க மறுத்தால், பங்கு கோரி, நீதிமன்றத்தில் வழக்காட வேண்டும்.

உயில் ஆவணம் இல்லை என்றால், அந்த வழக்கில் இந்திய வாரிசுச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய வாரிசு சட்டத்தின்படி, இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, சொத்து சட்டபூர்வ வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படுகிறது

Previous Story

ஒலியைவிட 3 மடங்கு வேகம் கொண்ட சீனா ‘ஸ்பை ட்ரோன்’- அமெரிக்கா 

Next Story

தள்ளாடுகின்றது சஜீத் கூடாரம்!