‘தனக்கு எதிரான தனதுரை’

-நஜீப்-

கடந்த புதன் கிழமை புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் துவக்கி வைத்து ஜனாதிபதி ரணில் ஆற்றிய உரை தொடர்பாக அணுரகுமார ஊடகச் சந்திப்பில் பேசுகின்ற போது, அவருக்கு எதிராக அவரே பேசி இருக்கின்றார் அவ்வளவுதான்.

அந்த முரண்பாடுகளை அவர் அங்கு பட்டியலிட்டுக் காட்டினார் ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்க. சஜித் அணி ராஜித்தவிடம்  உரை பற்றி கோட்டால் நான் முன்பு என்ன சொல்லி வந்தேனோ அதனைத்தான் அவர் இப்போது பேசி இருக்கின்றார். ஆனால் அவர் சொல்கின்ற படி நடந்து கொண்டால் நல்லது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று நழுவினார் அவர்.

பொதுவாக அவதானிக்கின்ற போது ஜனாதிபதி ரணில் ஆற்றிய உரை வரவேற்பை பெற்றிருந்தாலும் அதற்கு உருவம் கொடுக்க அவரால் முடியாது என்தும் நமது மதிப்பீடு. உதாரணத்துக்கு தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு என்று சொன்னால் மட்டும் போதாது. நடை முறையில் செய்து காட்ட வேண்டும். இதனை அவர் சாதிப்பார் என்று எவராவது நம்புகின்றீர்களா? மொட்டுக் கட்சியில் உயிர் வாழ்கின்ற அவரால் இதனை சாதிக்கத்தான் முடியுமா? இது போன்றுதான் ஏனைய விவகாரங்களும்.

இதற்க்கிடையில் சஜித் அணியை அனைத்தக் கட்சி அரசு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கின்றார். அந்த அரசில் நாங்கள் இணைந்து கொள்ள மாட்டோம் என்று சொன்னவர்கள், இப்போது அந்தப் பேச்சுவார்த்தைகளில் போய் கலந்து கொள்வது தொடர்பாக தமது சம்மதத்தை வெளியிட்டிருக்கின்றார்கள்.  பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும் என்று நாம் நம்பவில்லை.

நன்றி:07.08.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மனச்சோர்வுக்கு உண்மையில் மருந்துகள் தீர்வு அளிக்குமா?

Next Story

சீனாவை தொடர்ந்து ஜப்பான்  கடனை இடைநிறுத்தம்