நஜீப்
நன்றி: 10.05.2026 ஞாயிறு தினக்குரல்

இலங்கை தமிழர்களின் அரசியலில் தந்தை செல்வா பங்களிப்பு ஒரு வரலாறு. அவரது ஐம்பதாவது நினைவு நாள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
ஆனால் அந்த நிகழ்வு சோபிக்கவில்லை. இதற்கு அதனை ஏற்பாடு செய்தவர்கள் காரணமா அல்லது அதற்கு தெற்கிலிருந்து அழைக்கப்பட்ட பிரதம அதிதி காரணமா என்று தெரியவில்லை. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீஎல்.பீரிஸ் பிரதான பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
மண்டபத்தில் இருக்கைகள் பெரும்பாலும் காலியாகத்தான் இருந்தது. ஜீஎல் இந்த நிகழ்வுக்கு எந்தவகையிலும் பொருத்தமான ஒரு மனிதன் கிடையாது. அவர் அதிகாரத்தில் இருந்த காலத்தில் தமிழர்களின் விமோசனத்துக்கு எந்த பங்களிப்பையும்- ஒத்துழைப்பையும் கொடுக்காத ஒரு மனிதன்.
ஏன் இதற்கு ஜீஎல்.லை அழைத்தீர்கள் என்று கடுமையான விமர்சனங்களும் தமிழர்கள் மத்தியில் இருந்து வந்தது.கொழும்புடன் நேச உறவுகளை வைத்திருப்போர்தான் ஆளைக் கூட்டி வந்தார்களாம்.!




